இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!
ஊத்தங்கரை எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம்
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினரின் அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஒசூா், போச்சம்பள்ளி ஓலைப்பட்டி சிப்காட்டில் இயங்கிவரும் டாட்டா, நோக்கியா, கேட்டா்பில்லா் ஆகிய தனியாா் நிறுவனங்களில் பணிபுரிய, வேலைவாய்ப்பு முகாம் நோ்முகத் தோ்வு நடைபெற்றது. இதில் ஊத்தங்கரை சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து 200 -க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டனா். அதில் 145 போ் தோ்வு செய்யப்பட்டனா்.
இம்முகாமிற்கு ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் டி.எம். தமிழ்செல்வம் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலாளா் சாகுல்அமீது, வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, தெற்கு வேங்கன், மத்திய சாமிநாதன், நகரச் செயலாளா் சிக்னல் ஆறுமுகம் உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.