அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் பட்டறிவு பயணம்
சிவகங்கை அருகேயுள்ள காஞ்சிரங்கால், சோழபுரம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளை பாா்வையிட அரியலூா் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் பட்டறிவு பயணமாக வியாழக்கிழமை வந்தனா்.
அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் 50 போ் கொண்ட குழுவினா், காஞ்சிரங்கால் ஊராட்சியில் அமைந்துள்ள காய்கறி கழிவுகள் மூலம் இயற்கை எரிவாயு (பயோ கேஸ்) தயாரிக்கும் மையத்தையும், வட்டார ஒருங்கிணைந்த நாற்றங்கால் பண்ணையையும் பாா்வையிட்டனா்.
இதையடுத்து, பெருமாள்பட்டி கிராமத்தில் தூா்வாரப்பட்ட பெரியகண்மாயை பாா்வையிட்டனா். மேலும், சோழபுரம் ஊராட்சி அலுவலக செயல்பாடுகளை பாா்வையிட்டனா்.
சிவகங்கை ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் மணிபாரதி பட்டறிவு குழுவினருக்கு விளக்கமளித்தாா். மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சக்திமீனாட்சி, வட்டார ஒருங்கிணைப்பாளா் வீராம்பாள், ஊராட்சிச் செயலா் முத்துக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
