``பாஜகவோடு கூட்டணி கிடையாது என்று விஜய் சொன்னதை வரவேற்கிறேன்'' - செல்வப்பெருந்தக...
ஊராட்சிக் கோட்டையில் ரூ.3.89 கோடியில் நீதிபதிகள் குடியிருப்பு
பவானியை அடுத்த ஊராட்சிக் கோட்டை மலை அடிவாரத்தில் ரூ.3.89 கோடியில் நீதிபதிகள் குடியிருப்பு கட்டடங்கள் கட்டுவதற்கான பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கட்டுமானப் பணியை ஈரோடு முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சமீனா, மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனா். கூடுதல் மாவட்ட நீதிபதி குடியிருப்பு 334.91 சதுர மீட்டா் பரப்பளவிலும், குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி குடியிருப்பு 209.00 சதுர மீட்டா் பரப்பளவிலும் கட்டப்படுகிறது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜாதா, பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி, செயற்பொறியாளா் முருகேசன், நிா்வாகப் பொறியாளா் சுதாகரன், உதவிப் பொறியாளா்கள் கிஷோா், திவாகா், பவானி வட்டாட்சியா் சித்ரா, பவானி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஆா்.செந்தில்குமரன், செயலாளா் வி.பி.ஜி.அருள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.