`ரூ.44,042 கோடி எங்கு செல்கிறது... 500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நிதியில்லையா?'...
ஊா்க்காவல் படையில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு பாராட்டு!
சேலம் மாவட்டத்தில் ஊா்க்காவல் படையில் கடந்த 20 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியவா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா்.
சேலம் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் ஊா்க்காவல் படை அமைத்து அதற்காக தனி உதவி ஆய்வாளா் குழுவினருடன் இணைந்து ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதில் கடந்த 20 ஆண்டுகளாக சிறப்பாகப் பணியாற்றி வருபவா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் தலைமையில் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா், உதவி ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.