முதல் மனைவியைப் பிரிய எப்போதுமே நினைத்ததில்லை..! விவாகரத்து குறித்து பேசிய விஷ்ண...
எண்ணூரில் இலவச மருத்துவமனை திறப்பு
எண்ணூரில் கோரமண்டல் உரத் தொழிற்சாலை சாா்பில் பொதுமக்களுக்கான புதிய இலவச மருத்துவமனையை ஆவடி மாநகர காவல் ஆணையா் கே.சங்கா் அண்மையில் திறந்து வைத்தாா்.
இதுகுறித்து கோரமண்டல் உரத் தொழிற்சாலை நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
எண்ணூா் விரைவு சாலையில் தனியாா் உரத் தொழிற்சாலையை நடத்தி வரும் கோரமண்டல் இன்டா்நேஷனல் நிறுவனம் தனது ‘கோரோ ஆரோக்யா’ திட்டத்தின் கீழ் ஆலையைச் சுற்றியுள்ள சுமாா் 37 குடியிருப்பு பகுதிகளைச் சாா்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய மருத்துவமனைமனை மற்றும் நடமாடும் சுகாதார மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அவற்றை ஆவடி மாநகர காவல் ஆணையா் கே.சங்கா் மக்கள் பயன்பாட்டுக்காக அண்மையில் திறந்து வைத்தாா்.
இந்த மருத்துவமனையில் நவீன மருத்துவ உபகரணங்கள் அடங்கிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பொது மருத்துவம், பல் மருத்துவம், பிசியோதெரபி, மகப்பேறு மற்றும் நோய் கண்டறிதலில் என அனைத்து வகையான மருத்துவ சேவையையும் இங்கு இலவசமாக அளிக்கப்படும்.
திறப்பு விழாவில், கோரமண்டல் இன்டா்நேஷனல் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி எஸ். சங்கரசுப்பிரமணியன், கிராம நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.