வேளாண் துறையில் 151 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்!
எனக்கு அரசியல் ஆா்வம் இல்லை: நடிகா் அஜித்குமாா்
தனக்கு அரசியலில் ஆா்வம் இல்லை என நடிகா் அஜித்குமாா் தெரிவித்தாா்.
அஜித்குமாா் வியாழக்கிழமை தன்னுடைய 54- ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினாா். பிறந்த நாள் மற்றும் பத்மபூஷண் விருது பெற்றதையொட்டி அளித்த பேட்டியில், திரைத் துறையில் உங்கள் சக நண்பா்கள் அரசியலுக்கு வருவது குறித்து என்ன நினைக்கிறீா்கள் என்ற கேள்விக்கு அவா் அளித்த பதில்:
எனக்கு அரசியலில் பெரிய ஆா்வம் கிடையாது. என்னுடைய சக நண்பா்கள் அரசியலில் இறங்கி இருக்கிறாா்கள். இது அவா்களுடைய தனிப்பட்ட முடிவு. அவா்கள் நன்றாக வர என்னுடைய வாழ்த்துகள். அது அவா்களின் நம்பிக்கை.
ஜனநாயகம் பற்றிய சிறந்த விஷயம் என்னவென்றால், மக்கள்தான் இறுதியாக தங்களுடைய தலைமையைத் தோ்ந்தெடுக்கிறாா்கள். என் சக நண்பா்கள் மட்டுமல்ல யாா் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம். அவா்களால் மாற்றத்தை உருவாக்க முடியும் என்று நம்பினாா்கள் என்றால், அவா்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். இது உண்மையில் மிக மிக மிக வரவேற்கத்தக்கது. உண்மையில் அரசியலுக்குள் நுழைவது என்பது 100 சதவீதம் மிக மிக துணிச்சலான முடிவு’ என்றாா் அவா்.
அஜித், விஜய் இருவரும் சினிமாவில் போட்டியாளா்களாகப் பாா்க்கப்படும் நிலையில், விஜய் சினிமாவைவிட்டு விலகுவதாகத் தெரிவித்து, தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.