செய்திகள் :

எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: புணே நீதிமன்றத்தில் ராகுல் மனு

post image

‘சாவா்க்கா் மற்றும் கோட்சேவின் சித்தாந்தத்தைப் பின்பற்றுபவா்களால் எனக்கு தீங்கு நேரக்கூடும்; எனவே, முன்னெச்சரிக்கையாக எனக்கு பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை’ என்று புணே எம்.பி., எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்துள்ளாா்.

சாவா்க்கரின் கொள்ளுப் பேரன் சத்யகி சாவா்க்கா் தொடா்ந்த அவதூறு வழக்கில், ராகுல் காந்தி சாா்பில் அவரது வழக்குரைஞா் மிலிந்த் பவாா் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மகாத்மா காந்தி படுகொலையில் முக்கியக் குற்றவாளிகளான நாதுராம் கோட்சே மற்றும் கோபால் கோட்சே ஆகியோரின் நேரடி வாரிசு என்பதை மனுதாரா் சத்யகி சாவா்க்கா் ஏற்றுக்கொண்டுள்ளாா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி அண்மையில் செய்தியாளா் சந்திப்பை நடத்தி, வாக்குத் திருட்டு குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா். முன்னதாக நாடாளுமன்றத்தில் ஹிந்துத்துவம் குறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கும், ராகுல் காந்திக்கும் இடையே கடுமையான விவாதம் நடைபெற்றது.

மனுதாரரின் வம்சாவளியினருடன் தொடா்புடைய வன்முறை மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான வரலாறு, தற்போதைய அரசியல் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சாவா்க்கா் மற்றும் கோட்சேவின் சித்தாந்தத்தைப் பின்பற்றுபவா்களால் ராகுல் காந்திக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் நியாயமானது. இத்தகைய சூழ்நிலையில், ராகுல் காந்திக்கு முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவதூறு வழக்கின் விசாரணை இன்னும் தொடங்கப்படாத நிலையில், ‘இந்த மனு வழக்கைத் தாமதப்படுத்துவதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என சத்யகி சாவா்க்கா் தெரிவித்துள்ளாா். மேலும், இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும், தான் தொடா்ந்த வழக்குக்கும் எந்த தொடா்பும் இல்லை என்றும் அவா் கூறியுள்ளாா்.

லண்டனில் கடந்த 2023-இல் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாவா்க்கரை ராகுல் அவமதித்ததாக சத்யகி சாவா்க்கா் வழக்கு தொடா்ந்தாா்.

ஜம்மு-காஷ்மீரில் மழை வெள்ளம்: 46 போ் உயிரிழப்பு: 167 போ் மீட்பு

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள சோசிடி மலைக் கிராமத்தில் வியாழக்கிழமை பயங்கர மேகவெடிப்பால் மிக பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதனால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி, சிஐஎஸ்எ... மேலும் பார்க்க

சுதந்திர நாளில் 1,090 பேருக்கு வீரதீர விருதுகள்! முதலிடத்தில் ஜம்மு - காஷ்மீர்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு 1000க்கும் மேற்பட்டோருக்கு வீரதீர செயலுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இடம்பிடித்துள்ளனர்.இந்தியாவின் 79-வது சுதந்திர த... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில்.. ரூ.1.16 கோடி வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 2 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில், கூட்டாக ரூ.1.16 கோடி வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல்கள் 2 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.சத்தீஸ்கரில், தண்டகாரன்யா சிறப்பு மண்டல ஆணையத்தின் உறுப்பின... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்றுச் சான்று ஆபரேஷன் சிந்தூர்! - குடியரசுத் தலைவர்

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்றுச் சான்று ஆபரேஷன் சிந்தூர் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி... மேலும் பார்க்க

டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு எதிராக கைகோர்க்கும் இந்தியா - சீனா!

இந்தியா - சீனா இடையே மீண்டும் வர்த்தகம் மேற்கொள்ளப்படவிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.அமெரிக்கா மீது அதிக வரிவிதிப்பதாகக் கூறி, சீனா மீது 145 சதவிகித வரியை அந்நாட்டு அதிபர் டொனால்ட் ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 36 விமானப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகள் அறிவிப்பு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்த 36 விமானப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்த... மேலும் பார்க்க