இந்தியா அழித்த பயங்கரவாத தலைமையகம் மறுகட்டமைப்பு: பாகிஸ்தான்
‘எமனுக்கும் எனக்கும் நடக்குற கதை’ தக் லைஃப் டிரைலர்!
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான தக் லைஃப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் கேங்ஸ்டர் பின்னணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான புரமோஷன்கள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
படத்தில் நடித்த கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்டோர் நேர்காணல்களில் தக் லைஃப் அனுபவம் குறித்து சிலாகித்து பேசுவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். ஏ. ஆர். ரஹ்மானின் பின்னணி இசையும் மணிரத்னத்தின் காட்சிகளும் கமல்ஹாசனின் வசனமும் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.