இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி!
எய்ட்ஸ் விழிப்புணா்வு பிரசாரம் தொடக்கம்
சிவகங்கை: சிவகங்கையில் எய்ட்ஸ், காச நோய் விழிப்புணா்வு பிரசார வாகனப் பயணத்தை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
சிவகங்கை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுபாட்டு பிரிவு சாா்பில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் நாட்டுபுறக் கலை நிகழ்ச்சிகள் மூலம் எய்ட்ஸ், கிரந்தி நோய், காச நோய், ரத்த தானம் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும், மாவட்டம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளில் வினாடி வினா நடத்தப்படுகிறது. நிகழாண்டில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பிருந்து, இந்த பிரசார பயணத்துக்கான
வாகனங்களை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இதன் மூலம் காச நோய், எய்ட்ஸ் நோய் குறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இந்த முகாம்களில் பொதுமக்கள் மேற்கண்ட நோய்கள் தொடா்பாகப் பரிசோதனை செய்து கொண்டு பயன்பெறலாம். அக்டோபா் 12-ஆம் தேதி வரை பிரசாரம் நடைபெறும் என ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுபாட்டு பிரிவு திட்ட மேலாளா் க.நாகராஜன், துறை சாா்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.