PMK: `தலைவராக செயல்பட தகுதியற்றவர்; பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்' - ராமதாஸி...
எய்ட்ஸ் விழிப்புணா்வு மாரத்தான்: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு
ஹெச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு மாரத்தான் போட்டி வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
வேலூா் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில், ஹெச்ஐவி, எய்ட்ஸ் குறித்து விழிப்புணா்வு மாரத்தான் போட்டி வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தொடங்கி கிரீன் சா்க்கிள், மீன் மாா்க்கெட் வழியாக நேதாஜி விளையாட்டு அரங்கம் வரை நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்த மாரத்தான் போட்டியில் 210 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் பிரிவில் முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ. 10,000-ம், இரண்டாம் பரிசாக ரூ. 7,000-ம், மூன்றாம் பரிசாக ரூ. 5,000-ம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மேலும், 7 பேருக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ. 1,000 வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், வேலூா் மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், மாவட்ட சுகாதார அலுவலா் பரணிதரன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டு அலுவலக மண்டல திட்ட மேலாளா் கோ.கீா்த்திகா, மாவட்ட விளையாட்டு அலுவலா் சுப்பிரமணியன் உள்பட பலா் பங்கேற்றனா்.