ஜன.25-இல் தேவாரத் திருமுறை மனனப் போட்டிகள்: சேக்கிழாா் ஆராய்ச்சி மையம்
எல்லை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையில் நிரப்பப்பட உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்த இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Head Constable(Moter Mechanic)
காலியிடங்கள்: 7
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் மோட்டார் மெக்கானிக் பிரிவில் ஐடிஐ முடித்து குறைந்தது 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Constable(Motor Mechanic)
காலியிடங்கள்: 44
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மோட்டார் மெக்கானிக் பிரிவில் ஐடிஐ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100
வயதுவரம்பு: 22.1.2025 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
உடற்தகுதி: ஆண்கள் குறைந்தபட்சம் 170 செ.மீ உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 80 செ.மீட்டரும், 5 செ.மீட்டரும் சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். பெண்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ உயரம் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? |டிஆர்டிஓ-வில் ஜேஆர்எப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தேர்வு செய்யப்படும் முறை: இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, தொழில்திறன் தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்த்தலின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இது குறித்த தகவல் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, இஎஸ்எம், பெண்கள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.1.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.