செய்திகள் :

எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனை தொடக்க விழா!

post image

சென்னை ராமாபுரத்தில் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் பல்நோக்கு மருத்துவமனையான எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனையின் தொடக்க விழா நடைபெற்றது.

கல்வி மற்றும் மருத்துவத்தில் பெயர்பெற்ற எஸ்.ஆர்.எம். குழுமம், மேம்பட்ட மருத்துவ சிகிச்சை அளிக்கும் பொருட்டு, சென்னை ராமாபுரம் பகுதியில் ஒரு புதிய பல்நோக்கு மருத்துவமனையை அமைத்துள்ளது.

300-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள், 75-க்கும் மேற்பட்ட அதிநவீன சிறப்பு படுக்கைகள், 7 மேம்பட்ட மாடுலர் அறுவை சிகிச்சை அரங்குகள், சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களுக்கும் ஏற்ற 30-க்கும் மேற்பட்ட சிறப்பு சிகிச்சைகள், டிஜிட்டல் எக்ஸ்-ரே, செய்யறிவு மூலம் இயங்கும் சிடி ஸ்கேன், மேம்பட்ட 3டி எம்ஆர்ஐ, இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி மற்றும் முழுமையான, விரிவான ஆய்வக வசதிகளைக் கொண்டுள்ளது.

இந்த எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனையின் தொடக்க விழா கடந்த ஏப். 30(புதன்கிழமை) அன்று நடைபெற்றது. மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஆர். சிவகுமார், துணைத் தலைவர் கீதா சிவகுமார் மற்றும் இணைத் தலைவர் எஸ். சிவராஜன் ஆகியோர் முன்னிலையில் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் நிறுவனரான டாக்டர் பாரிவேந்தர் மருத்துவமனையை திறந்து வைத்தார்.

எஸ்.ஆர்.எம். பிரைம் பல்நோக்கு மருத்துவமனை, உயர்தர மருத்துவ சேவைகளை வழங்குவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக விளங்கும் என்று எஸ்.ஆர்.எம். நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்தார்.

இந்த விழாவில் எஸ்.ஆர்.எம். குழுமத்தைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.

ஆம்பூரில் சூறைக்காற்று: 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்!

ஆம்பூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியதால் 500-க்கு மேற்பட்ட வாரை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். திருப்பத்தூர், ஆம்பூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த... மேலும் பார்க்க

பாஜக அரசுக்கு கண்டனம்! திமுக செயற்குழு தீர்மானங்கள்!

திமுகவின் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(சனிக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்ற... மேலும் பார்க்க

அதிமுகவை அடக்கிய பாஜக; தகுதியானவருக்கே தேர்தலில் வாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன... மேலும் பார்க்க

சென்னையில் ஜெ.பி. நட்டா தலைமையில் பாஜக மைய குழுக் கூட்டம்!

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையில் சென்னையில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று(சனிக்கிழமை) காலை நடைபெற்று வருகிறது. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு சென்னை வந்... மேலும் பார்க்க

நாளை(மே 4) தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் நாளை(மே 4, ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.மே மாதம் என்றாலே நினைவுக்கு வருவது சுட்டெரிக்கும் வெயில்தான். அதிலும் மே மாதத்தில் 25 நாள்கள் கத்திரி வெ... மேலும் பார்க்க

விஜயுடன் கூட்டணியா?: நயினாா் நாகேந்திரன் பதில்

தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜயின் தவெகவை இணைக்க பேச்சுவாா்த்தை நடக்கிா என்ற கேள்விக்கு, ‘தோ்தல் நெருங்கும்போது தெரியும்’ என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் பதிலளித்தாா். சென்னை விமான நிலையத்த... மேலும் பார்க்க