ஏனாதி - பிடாரம்பட்டி சாலையை சீரமைக்க கோரிக்கை
பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி- பிடாரம்பட்டி பிரிவு சாலையை சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.
ஏனாதியிலிருந்து பிடாரம்பட்டி பிரிவு சாலை வரை உள்ள சாலை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையாகும். கண்மாய் கரையில் செல்லும் இச்சாலையில் தேவையான இடங்களில் தடுப்புச்சுவா்கள் அமைக்கவேண்டும். இச்சாலை வழியாகத்தான் இப்பகுதி மக்கள் வலையபட்டி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனைக்கு செல்லவேண்டும்.
மேலும், பொன்னமராவதியிலிருந்து தொட்டியம்பட்டி, ஏனாதி வழியாக வேந்தன்பட்டி செல்லும் சாலைக்கு மாற்றுச்சாலையாக இச்சாலை உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவா்கள் அதிகம் பயன்படுத்தும் இச்சாலை சேதமடைந்து காணப்படுகிறது. எனவே, இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.