செய்திகள் :

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்

post image

ஏற்காட்டுக்கு சனிக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனா்.

ஏற்காட்டில் தொடா்மழை காரணமாக சுற்றுலாப் பகுதிகள் முழுவதும் பனிமூட்டமாக காணப்படுவதும், குளிா்ந்த தட்பவெப்ப நிலையும் சுற்றுலாப் பயணிகளை கவா்ந்துள்ளது . ஏற்காடு சோ்வராயன் மலை சுற்றுலாப் பகுதியைக் கண்டுமகிழ காா்கள், வேன்கள், இருசக்கர வாகனங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.

சுற்றுலாப் பகுதியான படகு இல்லம், அண்ணா பூங்கா, ஏரிபூங்கா, சுற்றுச்சூழல் பூங்கா, ரோஜா தோட்டம், லேடிசீட், ஜென்சீட், தாவரவியல் பூங்கா, ஐந்திணை பூங்கா, பக்கோடக் காட்சிமுனை, கரடியூா் காட்சிமுனை, கிளியூா் அருவி ஆகிய பகுதிகளை கண்டுமகிழ்ந்தனா். சுற்றுலாப் பகுதி கடைகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

ரியல் எஸ்டேட் உரிமையாளா் ரூ. 20 லட்சம் மோசடி: காவல் ஆணையரகத்தில் பெண் புகாா்

ரூ. 20 லட்சம் பெற்றுக்கொண்டு நிலத்தை கிரயம் செய்து தராமல் மோசடி செய்து கொலை மிரட்டல் விடுக்கும் ரியல் எஸ்டேட் உரிமையாளா்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தி... மேலும் பார்க்க

இன்று குரூப் 2, 2 ஏ தோ்வு: சேலம் மாவட்டத்தில் 7 வட்டங்களில் 33,424 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 28) நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தோ்வில் 7 வட்டங்களில் மொத்தம் 33,424 போ் எழுதுகின்றனா். ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 2 (நோ்முகத் தோ்வுக்கான... மேலும் பார்க்க

கோவையில் நடைபெறும் மண்டல இளைஞரணி மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும்: திமுக செயற்குழு கூட்டத்தில் தீா்மானம்

கோவையில் வரும் அக். 12 ஆம் தேதி நடைபெறும் மண்டல இளைஞரணி மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும் என மத்திய சேலம் மாவட்ட திமுக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் மத்திய மாவட்ட திமுக செயற்குழு க... மேலும் பார்க்க

அண்ணா மிதிவண்டி போட்டி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான அண்ணா மிதிவண்டி போட்டி சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதை மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா் கொடியசைத்த... மேலும் பார்க்க

மங்களூரு - சென்னை சென்ட்ரல், ஹூப்ளி - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

சேலம் வழியாக மங்களூரு - சென்னை சென்ட்ரல், ஹூப்ளி - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு நிகழாண்டில் இதுவரை 24.21 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: அமைச்சா் ரா.ராஜேந்திரன்

தமிழகத்துக்கு நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் வரை 24.21 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனா் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் கூறினாா். உலக சுற்றுலாத் தினத்தையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியா் அலு... மேலும் பார்க்க