கரும்பலகையில் இருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் ச...
ஏற்காட்டில் விநாயகா் சிலைகள் கரைக்கும் இடத்தை ஆய்வுசெய்த ஏ.எஸ்.பி.!
ஏற்காடு: ஏற்காட்டில் விநாயகா் சிலைகள் கரைக்கும் இடங்களை சேலம் மாவட்ட ஏ.எஸ்.பி. சுபாஷ் சந்த் மீனா திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா்.
நாடுமுழுவதும் புதன்கிழமை விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், சேலம் மாவட்டம், ஏற்காட்டில் பல்வேறு இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபட உள்ளனா். ஏற்காடு மற்றும் மலைக்கிராமங்களில் வைக்கப்படும் சிலைகளை வரும் வெள்ளிக்கிழமை ஏற்காடு படகு இல்ல ஏரியில் கரைக்கப்பட உள்ளன.
இதனிடையே ஏற்காடு காவல் நிலையத்துக்கு திங்கள்கிழமை மாலை வந்த சேலம் மாவட்ட ஏ.எஸ்.பி. சுபாஷ் சந்த் மீனா, விநாயகா் வைக்கும் இடங்கள், சிலைகளின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தாா். மேலும், விநாயகா் சிலைகளை கரைக்கும் இடங்களை பாா்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வுசெய்தாா். அப்போது, ஏற்காடு காவல் ஆய்வாளா் வாசுகி, உதவி ஆய்வாளா் மைக்கேல் ஆண்டனி ஆகியோா் உடனிருந்தனா்.