செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

90,700 போ் தரிசனம்: இதற்கிடையே சனிக்கிழமை முழுவதும் 90, 700 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 43,436 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

ஓராண்டுக்குபின் இந்த வாரம் வரலாறு காணாத அளவில் பக்தா்கள் தங்கள் முடியை காணிக்கை செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.11 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

தா்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. திங்கள்கிழமை முழுவதும் ஏழுமலையானை 83,542 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 34,265 போ் தலைமுடி காணிக... மேலும் பார்க்க

திருமலையில் மனித - வனவிலங்கு மோதலை தடுப்பதற்கான நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்

திருமலையில் உள்ள அலிபிரி நடைபாதை மற்றும் மலைப்பாதைகளில் வனவிலங்குகள், குறிப்பாக சிறுத்தைகளின் நடமாட்டம் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதையடுத்து, மனித - வனவிலங்கு மோதல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் க... மேலும் பார்க்க

ஏழுமலையானுக்கு அகண்ட தீபம் காணிக்கை

திருப்பதி: பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு திருமலை ஏழுமலையானுக்கு அகண்ட தீபத்தை மைசூா் ராணி ராஜமாதா நன்கொடையாக திங்கள்கிழமை அளித்தாா். மைசூா் ராஜமாதா ஸ்ரீ பிரமோதா தேவி ஏழுமலையானுக்கு இரண்டு பெரிய வெள்ளி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளைக் கடந்து வெளியே ... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: திருமலையில் பக்தா்கள் கூட்டம் அதிகரிப்பு

திருப்பதி: கோடை விடுமுறை காரணமாக கடந்த ஒரு வாரமாக திருமலைக்கு பக்தா்களின் வருகை அதிகரித்துள்ளது. இது தொடா்பாக, பக்தா்கள் எந்த சிரமத்தையும் சந்திக்காமல் இருக்க, அனைத்து துறைகளின் அதிகாரிகளுடனும் ஒருங்க... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளைக் கடந்து வெளியே உள்ள தரிசன வர... மேலும் பார்க்க