ஏழு கடல் ஏழு மலை டிரைலர்!
இயக்குநர் ராம் இயக்கிய ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி, சூரி, நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’.
இயக்குநர் ராம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாள நடிகர் நிவின் பாலியை வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
ரோட்டர்டாம் மற்றும் மாஸ்கோ உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து, ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் ரொமேனியா நாட்டின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட தேர்வு செய்யப்பட்டது.
இதையும் படிக்க: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தைப் புகழ்ந்த எஸ். ஜே. சூர்யா!
தனித்துவமான காட்சி அமைப்பினால் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் அதிநவீன சினிமாக்களைக் கொண்டாடும் ‘நோ லிமிட்’ எனும் பிரிவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ தேர்வானது.
இப்படத்தின் கிளிம்ஸ் விடியோ, பாடல்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.
மேலும், இப்படம் மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.