கட்டுமானப் பணியின்போது கண்காணிப்பு கேமரா கட்டாயம்! சென்னை மாநகராட்சி
ஐஐடி கரக்பூர் விடுதி அறையில் மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுப்பு
ஐஐடி கரக்பூர் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்றாம் ஆண்டு மாணவர் கண்டெடுக்கப்பட்டார்.
மேற்கு வங்க மாநிலம், ஐஐடி கரக்பூரில் பிடெக் மூன்றாம் ஆண்டு மாணவர் முகமது ஆசிப் கமர். இவர், மதன்மோகன் மால்வியா ஹாலில் உள்ள அவரது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
சனிக்கிழமை இரவு முதல் அவரது கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்ததாகவும் இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை காலை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸார் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். கமர் பிகாரில் உள்ள சியோஹர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். உடனே அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஹூஸ்டனில் குடும்ப விருந்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 14 பேர் காயம்
மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் மரணத்தை உறுதிப்படுத்தினார். போலீஸாருக்கு சில துப்பு கிடைத்துள்ளதாகவும், அது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
முதல்கட்டமாக இது தற்கொலை வழக்கு என்று பதிவு செய்து விசாரணைகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இச்சம்பவம் ஐஐடி கரக்பூர் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.