இலக்கை நிா்ணயித்து செயல்பட வேண்டும்: மாணவா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்
ஐசிசி தரவரிசை வெளியீடு: ஒருநாள், டி20-களில் இந்தியா ஆதிக்கம்; டெஸ்ட்டில் சறுக்கல்!
ஐசிசி ஆடவர் அணிகளுக்கான தரவரிசையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்து அசத்தியுள்ளது.
ஐசிசியின் ஆடவர் அணிகளுக்கான தரவரிசையினை ஐசிசி இன்று (மே 5) வெளியிட்டது. அதில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணிகளில் இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்து குறுகிய வடிவிலான போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இருப்பினும், டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி சரிவை சந்தித்துள்ளது.
இதையும் படிக்க: ஜோஷ் இங்லிஷை 3-வது வீரராக களமிறக்கியது யாருடைய முடிவு? ரகசியம் பகிர்ந்த ரிக்கி பாண்டிங்!
ஐசிசியின் இந்த தரவரிசைக்காக கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து விளையாடியுள்ள போட்டிகள் முழுவதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல, கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் 50 சதவிகித போட்டிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
ஒருநாள், டி20 வடிவில் இந்தியா ஆதிக்கம்
2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபியை வென்று தனது இடத்தை ஒருநாள் போட்டிகளில் வலுவாக்கிக் கொண்டது. சாம்பியன்ஸ் டிராபியில் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி, ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் 2-வது இடத்தையும், ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.
From Test dominance to ODI and T20I brilliance, the updated ICC Men’s Team Rankings showcase outstanding cricketing feats https://t.co/IVTyPOyLyE
— ICC (@ICC) May 5, 2025
டி20 வடிவிலான போட்டிகளில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. நடப்பு டி20 உலகக் கோப்பை சாம்பியனான இந்திய அணி, டி20 அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தில் தொடர்கிறது. ஆஸ்திரேலிய அணி இரண்டாமிடமும், இங்கிலாந்து அணி மூன்றாமிடமும் பிடித்துள்ளன.
டெஸ்ட்டில் சறுக்கிய இந்தியா
ஒருநாள் மற்றும் டி20 வடிவிலான போட்டிகளில் முதலிடத்தை தக்கவைத்துள்ள போதிலும், டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி சரிவை சந்தித்துள்ளது.
இதையும் படிக்க: போதைப் பொருள் பயன்படுத்தியதால் இடைக்கால தடை; கிரிக்கெட் உலகுக்கு அதிர்ச்சியளித்த ரபாடா!
டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மூன்றாவது இடத்திலிருந்து ஒரு இடம் சறுக்கி 4-வது இடம் பெற்றுள்ளது. நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.