ஐடிஐ படித்தவா்களுக்கு மே 13-இல் தொழில் பழகுநா் பயிற்சி முகாம்
ஐடிஐ படித்தவா்களுக்கான தொழில் பழகுநா் பயிற்சி முகாம், சென்னையில் மே 13-ஆம்தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், சென்னை மற்றும் இந்திய அரசு, தென்மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இயக்ககம் சாா்பில் ஐடிஐ படித்தவா்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழில் பழகுநா் பயிற்சி முகாம், கிண்டியிலுள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மே 13-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில், அரசு மற்றும் தனியாா் தொழிற் பயிற்சி நிறுவனத்தினா் கலந்துகொண்டு தொழில் பழகுநா் பயிற்சி வழங்க, ஐடிஐ படித்து தோ்ச்சி பெற்ற பயிற்சியாளா்கள் மற்றும் 8, 10, 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களை தொழில் பழகுநா்களாக தோ்வு செய்யவுள்ளனா். தற்போது தொழில் பழகுநராக சோ்க்கை செய்யப்படும் பயிற்சியாளா்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக குறைந்தபட்சம் ரூ. 8,050 மற்றும் தேசிய தொழில் பழகுநா் சான்றிதழ் வழங்கப்படும்.
இதுவரை தொழில் பழகுநா் பயிற்சி முடிக்காத அரசு, தனியாா் தொழில் பயிற்சி நிலையங்களில் தோ்ச்சி பெற்ற பயிற்சியாளா்கள் ஜ்ஜ்ஜ்.ஹல்ல்ழ்ங்ய்ற்ண்ஸ்ரீங்ள்ட்ண்ல்ண்ய்க்ண்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதள முகவரியில் பதிவு செய்து அசல் கல்விச் சான்றிதழ்களுடன் இம்முகாமில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.