செய்திகள் :

ஐபிஎல்-லிருந்து எப்போது ஓய்வு? மனம் திறந்த எம்.எஸ்.தோனி!

post image

ஐபிஎல்-லிருந்து ஓய்வு பெறுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மனம் திறந்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

இதையும் படிக்க: கொஞ்சம் கொஞ்சமாக தகர்கிறதா சிஎஸ்கேவின் கோட்டை?

சிஎஸ்கேவின் தொடர்ச்சியான தோல்விகள் ஒருபுறமிருக்க, எம்.எஸ்.தோனி தாமதமாக களமிறங்குவது நடப்பு ஐபிஎல் தொடரில் மிகப் பெரிய பேசுபொருளாக மாறியது. அதன் பின், தோனியின் உடல் முன்பு போன்று இல்லை, அவர் பேட்டிங் செய்யும் இடத்தை ஆட்டத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவரே முடிவு செய்வார் என பயிற்சியாளர் ஃபிளெமிங் தெரிவித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான சிஎஸ்கேவின் கடந்த போட்டி சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியை தோனியின் பெற்றோர் நேரில் காண வந்திருந்தனர். இதனால், தில்லிக்கு எதிரான போட்டியுடன் தோனி ஐபிஎல்-லிருந்து ஓய்வு பெறப் போகிறார் என்ற செய்திகள் பரவின. ஆனால், ஓய்வு குறித்து தோனியே முடிவு செய்வார் என தெரிவித்து அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார் ஃபிளெமிங்.

ஓய்வு குறித்து மனம் திறந்த எம்.எஸ்.தோனி

ஐபிஎல்-லிருந்து தோனி ஓய்வு பெறப்போகிறாரா என்ற தகவல்கள் வேகமாக பரவிய நிலையில், ஐபிஎல்-லிருந்து ஓய்வு பெறுவது தொடர்பான முடிவை எடுக்க இன்னும் 10 மாதங்கள் இருப்பதாக எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இதையும் படிக்க: இளம் வயதில் ஜெய்ஸ்வால் இப்படி முடிவெடுக்கலாமா? முன்னாள் இந்திய வீரர் கூறுவதென்ன?

இது தொடர்பாக பாட்காஸ்ட் ஒன்றில் அவர் பேசியதாவது: நான் இன்னும் ஐபிஎல் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறேன். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நான் விளையாடுகிறேன். எனக்கு தற்போது 43 வயதாகிறது. நடப்பு ஐபிஎல் தொடரின் முடிவில் எனக்கு 44 வயதாகி இருக்கும். அதனால், அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவதா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்ய எனக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன. ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பதை நான் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறுவதைக் காட்டிலும், எனது உடல்தான் நான் விளையாட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள எம்.எஸ்.தோனி 76 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல்: 400+ ரன்கள் ஒரே போட்டியில்.. பெங்களூரு த்ரில் வெற்றி!

மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரின் 20-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பந்துவீசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை பெங்களூரு அணி வீரர... மேலும் பார்க்க

13,000 ரன்கள் விளாசிய ஒரே இந்தியர்.! டி20-ல் புதிய சாதனை படைத்த விராட் கோலி!

டி20 போட்டிகளில் 13,000 ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஆர்சிபி வீரர் விராட் கோலி படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற... மேலும் பார்க்க

டி20-யில் 200* விக்கெட்டுகள்: சாதனை படைத்த ஹார்திக் பாண்டியா!

அனைத்துவிதமான டி20 போட்டிகளிலும் 200 விக்கெட்டுகள் வீழ்த்தி ஹார்திக் பாண்டியா சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் ச... மேலும் பார்க்க

விராட் கோலி, ரஜத் படிதார் அசத்தல்; மும்பை இந்தியன்ஸுக்கு 222 ரன்கள் இலக்கு!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 5 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்ட... மேலும் பார்க்க

ஐபிஎல் போட்டிகளில் 2,500 ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் 2,500 ரன்களைக் கடந்துள்ளார்.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்... மேலும் பார்க்க

ஆர்சிபிக்கு எதிராக மும்பை பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் பும்ரா!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும... மேலும் பார்க்க