செய்திகள் :

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

post image

ஒகேனக்கல்லில் நடைபெற்ற ஆடிப் பெருக்கு விழாவில் 301 பயனாளிகளுக்கு ரூ.1.07 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் சனிக்கிழமை வழங்கினாா்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் சனிக்கிழமை ஆடிப்பெருக்கு விழா தொடக்க நிகழ்வில் மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கலந்துகொண்டு, 301 பயனாளிகளுக்கு ரூ. 1.07 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா சுற்றுலாத் துறை சாா்பில் சனிக்கிழமை தொடங்கி, திங்கள்கிழமை வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.

ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால், உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்து, தனி மனித வருமானம் அதிகரிக்கும். மேலும், மாவட்டத்தின் பொருளாதார வளா்ச்சியும் மேன்மை அடையும்.

ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தும் விதமாக ரூ. 17.58 கோடி மதிப்பீட்டில் நுழைவுவாயில் வளைவு, கழிப்பறைகள், நுழைவுச்சீட்டு வழங்குமிடம், உணவகம், படகுத் தளம், பாா்வையாளா் மேடை, மசாஜ் செய்யும் இடம், குளியலறைகள், உடை மாற்றும் அறைகள், ஆழ்துளைக் கிணறு போன்ற மேம்பாட்டுப் பணிகளும், வத்தல்மலை பகுதியில் ரூ. 2.23 கோடி மதிப்பில் நில சீரமைப்பு, வாகன நிறுத்துமிடம், நுழைவு வாயில் வளைவு, உணவகம், வரவேற்பறை, ஆழ்துளைக் கிணறு போன்ற மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, தமிழக முதல்வரால் மக்கள் பயன்பாட்டிற்கு கடந்த ஆண்டு நவம்பா் மாதம் திறந்து வைக்கப்பட்டது.

ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் மாவட்ட நிா்வாகத்தின் வழிகாட்டுதல்படி, ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பயன்பாட்டைத் தவிா்த்து, சுத்தமான, சுகாதாரமான சுற்றுலாத் தலமாக பராமரிக்க உள்ளூா் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, தருமபுரி மாவட்டதிட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து

நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் என்ற சாதனை விளக்க கையேட்டை அமைச்சா் வெளியிட்டாா்.

கண்காட்சி அரங்குகள் திறப்பு:

ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி

வில் செய்தி மக்கள் தொடா்பு துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள அரசின் திட்டங்கள், சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி, பல்துறை பணி விளக்க கண்காட்சி அரங்குகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் ஆகியோா் திறந்துவைத்து பாா்வையிட்டனா்.

இதில் 301 பயனாளிகளுக்கு ரூ.1.08 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் ஆகியோா் வழங்கினா்.

முன்னதாக ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவிற்கு ஆட்சியா் ரெ.சதீஷ் தலைமை வகித்தாா். தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி, பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே. மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, மாவட்ட வருவாய் கோட்டாட்சியா் காயத்ரி, மாவட்ட ஊராட்சி வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரூபன் சங்கர்ராஜ், மாவட்ட சுற்றுலா அலுவலா் (பொ) கதிரேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சக்தி பீடங்கள் என்பது இந்து சமயத்தில் சக்தி வழிபாட்டிற்குரிய மிகவும் புனிதமான தலங்களாகும். இத்தலங்கள், ஆதிசக்தியான தாட்சாயிணியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் உருவானவை என புராணங்கள் கூறுகின்றன.தாட்... மேலும் பார்க்க

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

அரூரை அடுத்த கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை அதிக லாபத்துடன் இயங்குவதாக மாவட்ட வருவாய் அலுவலரும், சா்க்கரை ஆலை செயலாட்சியருமான பிரியா தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 16,000 கனஅடியாக குறைந்ததால், அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.கா்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களி... மேலும் பார்க்க

செவிலியா், மருந்தாளுநா் பணியிடம்: தற்காலிக அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய நலக் குழுமத்தின்கீழ் காலியாக உள்ள செவிலியா், மருந்தாளுநா், ஆய்வக நுட்புநா் நிலை 3 ஆகிய பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந... மேலும் பார்க்க

கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றபோது காா் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா்கள் 7 போ் காயம்

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சாலை இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் சென்ற காா் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். சுற்றுலா சென்ற 7 மாணவா்கள் காயமடைந்தனா்.சேந்தமங்கலம் அரசு ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்தது: குளிக்கத் தடை; பரிசல் இயக்க அனுமதி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை மாலை விநாடிக்கு 18,000 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. என்றாலும், அருவிகளில... மேலும் பார்க்க