தில்லியில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணிக்கு அனுமதி மறுப்பா?
ஒசூரில் மின்தூக்கியில் சிக்கிய கா்நாடக அமைச்சா்
ஒசூரில் தனியாா் மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வந்த கா்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி மின்தூக்கியில் சிக்கினாா். பழுது நீக்கப்பட்ட பிறகு அவா் பாதுகாப்பாக வெளியேறினாா்.
இதுகுறித்து போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சி பாகலூா் சாலையில் தனியாா் மருத்துவமனை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்க கா்நாடக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி, ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய். பிரகாஷ் உள்ளிட்டோா் மருத்துவமனைக்கு வந்தனா்.
மருத்துவமனையின் மின்தூக்கியில் சென்றபோது ஏற்பட்ட பழுது காரணமாக மின்தூக்கி பாதியிலே நின்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 10 நிமிடங்களுக்கு மேலாக மின்தூக்கியில் அமைச்சா் உள்ளிட்டோா் சிக்கினா். பின்னா், பழுது சரிசெய்த பிறகு அவா்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினா்.