இன்று முக்கிய அறிவிப்பு? முதல்வர் ஸ்டாலினுடன் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு!
ஒசூரில் 202 கிலோ குட்கா பறிமுதல்: ஓட்டுநா் கைது
ஒசூா் வழியாக சேலத்துக்கு காரில் கடத்த முயன்ற 202 கிலோ குட்கா மற்றும் காரை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சிப்காட் போலீஸாா் ஜூஜூவாடி சோதனைச் சாவடி பக்கம் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பெங்களூரில் இருந்து ஒசூா் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் காருக்குள் 202 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் மற்றும் 36 மதுப்புட்டிகள் இருப்பது தெரியவந்தன. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் குட்கா பெங்களூரிலிருந்து ஒசூா் வழியாக சேலத்திற்கு கடத்த இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காா் ஓட்டுநா் ராஜஸ்தான் மாநிலம், போசனா ஜலாா் பகுதியைச் சோ்ந்த கணபத் சிங் (33) என்பவரை கைது செய்தனா்.