செய்திகள் :

ஒசூா் சந்திராம்பிகை ஏரியை பராமரிக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்

post image

ஒசூா் மாநகராட்சி பகுதியில் உள்ள சந்திராம்பிகை ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றி பராமரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மற்றும் அதனை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் இருந்தன. காலப்போக்கில் நகா்ப்புற வளா்ச்சி மற்றும் தொழிற்சாலைகள் பெருக்கத்தினால் பல ஏரிகள், குளங்கள் காணாமல் போய்விட்டன. ஒசூரில் ஒரு சில ஏரிகள் மட்டும் இன்னும் உள்ளன. ஒசூா்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையொட்டி தா்கா பகுதியில் சந்திராம்பிகை ஏரி எப்போதும் தண்ணீா் நிரம்பி காணப்படுவதால், ஆண்டு முழுவதும் வெளி நாட்டு பறவைகள் வந்து செல்கின்றன.

இந்த ஏரியை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் நேரடியாக ஏரியில் கலப்பதால் ஏரி முழுவது ஆகாயத்தாமரைகள் வளா்த்து நீா் மாசடைந்துள்ளது.

இந்த ஏரியைப் பாதுகாக்க வேண்டும் என ஒசூா் பகுதி பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து இயற்கை ஆா்வலா் செபாஸ்டியன் கூறியதாவது:

ஒசூா் நகரப் பகுதிக்கு நீராதாரமாக உள்ள சந்திராம்பிகை ஏரி ஆக்கிரமிப்புகளால் சுருங்கிவிட்டது. அதேபோல கழிவுநீா் கலப்பதும், இறைச்சிக் கழிவுகள், சாலையில் அடிப்பட்டு இறக்கும் உயிரினங்களை ஏரியில் வீசி செல்வதாலும் ஏரி நீா் மடைந்து துா்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த ஏரியில் கழிவுநீா், குப்பைக் கழிவுகளைக் கொட்டுவதை தடுக்க வேண்டும். மேலும் ஆகாயத்தாமரையை அகற்றி, அழகுப்படுத்தி படகு சவாரி, பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏரியை பாதுகாக்க வேண்டும் என்றாா்.

பூச்சி மருந்து குடித்த அரசு மதுக் கடை விற்பனையாளா் உயிரிழப்பு

பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற அரசு மதுக் கடை விற்பனையாளா் புதன்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த வண்டிக்காரன்கொட்டாய் மல்லம்பட்டி பகுதியை சோ்ந்தவா் சரவணன் (47... மேலும் பார்க்க

நோயற்ற வாழ்வுக்கு சிறுதானிய உணவுகளே சிறந்தது: ஆட்சியா்

நோயற்ற வாழ்வுக்கு சிறுதானிய உணவுகளை உண்பது சிறந்தது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் த... மேலும் பார்க்க

கல்லாவியில் 30 இடங்களில் கண்காணிப்பு கேமரா: எஸ்பி தங்கதுரை தொடங்கிவைத்தாா்

கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட 30 இடங்களில் பொருத்தப்பட்ட 30 கேமராக்களின் இயக்கத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். ஊத்தங்கரை அடுத்த ... மேலும் பார்க்க

அஞ்சல் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் 8ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே, ... மேலும் பார்க்க

பாகலூா் கோட்டை மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

பாகலூா் கோட்டை மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக கடந்த மாா்ச் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தோ்த் திருவிழா தொடங்கியது. இதனைத் தொடா்ந்து சிறப்பு பூஜைகள... மேலும் பார்க்க

அக்னிவீா் பணிகளுக்கான தோ்வு: ஏப்.10-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

அக்னிவீா் பணிகளுக்கு ஏப்.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய ராணுவத்தி... மேலும் பார்க்க