செய்திகள் :

ஒடிசா: நாள்தோறும் 3 குழந்தை திருமணங்கள்!

post image

ஒடிசாவில் கடந்த 6 ஆண்டுகளாக தினசரி 3 குழந்தை திருமணங்கள் நிகழ்த்தப்படுவதாக மாநில அரசின் தரவறிக்கையில் கூறியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் கடந்த 6 ஆண்டுகளாக, நாள்தோறும் குறைந்தது 3 குழந்தை திருமணங்கள் நிகழ்த்தப்படுவதாக மாநில அரசின் தரவறிக்கை கூறுகிறது. 2019 முதல் 2025, பிப்ரவரி வரை ஒடிசா முழுவதும் 8,159 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளதாக தரவு வெளிப்படுத்துகிறது.

அவற்றில் அதிகபட்சமாக 1,347 வழக்குகள் நபரங்பூரிலிருந்து பதிவாகியுள்ளன. குழந்தை திருமணங்களைத் தடுக்க, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை விழிப்புணர்வு பிரசாரங்களையும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

குழந்தை திருமண நடவடிக்கை குறித்து சமூக ஆர்வலர் நம்ரதா சதா கூறியதாவது, குழந்தைத் திருமணத்தை ஒரே இரவில் முற்றிலுமாக நிறுத்த முடியாது. பெண் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்க, ஒரு சூழலையும் சமூகத்தையும் நாம் உருவாக்க வேண்டும். வயது குறைந்த குழந்தைகளை திருமணம் செய்வது பழங்குடியினரின் பாரம்பரிய நடைமுறையாகும்.

வழக்கமாக, புலம்பெயர் தொழிலாளிகளான தங்கள் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும், அல்லது புலம்பெயரும் இடத்தில் வேறு யாருடனும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளாதிருப்பதற்காகவே, வயது குறைந்த பெண் குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் திருமணம் முடித்து வைக்கின்றனர். வரதட்சிணையும் ஒரு காரணமாக இருக்கலாம். மணமகளின் வயதுக்கேற்ப தேவை அதிகமாகும்; அதனால்கூட, சிறுவயதிலேயே சிலர் திருமணம் செய்து வைக்கின்றனர்.

இதையும் படிக்க:மோசமான சாலைகளுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்? மத்திய அரசுக்கு ராஜஸ்தான் எம்.பி. கேள்வி!

இதனைத் தடுக்க, அவர்களுக்கு முறையான கல்வி அல்லது திறன் மேம்பாட்டுப் பயிற்சியை வழங்கப்பட வேண்டும். இதன் மூலம், அவர்கள் சுயதொழில் செய்ய முடியும்; ஒரு பெண்ணின் எதிர்காலத்திற்கு திருமணம் மட்டுமே ஒரே படி என்று அவர்கள் நினைக்க மாட்டார்கள்’’ என்று தெரிவித்தார்.

குழந்தை திருமணம் பிரச்னை மட்டுமின்றி, குழந்தை தொழிலாளர் பிரச்னைகளையும் ஒடிசா அரசு எதிர்கொண்டு வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 328 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

பிரதமா் மோடி - முகமது யூனுஸ் சந்திப்பு: பரிசீலனையில் உள்ளதாக நாடாளுமன்றக் குழு தகவல்

பிரதமா் நரேந்திர மோடி, வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் சந்தித்துப் பேச வேண்டும் என்ற வங்கதேசத்தின் பரிந்துரையை பரிசீலித்து வருவதாக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சா... மேலும் பார்க்க

பொதுத்துறை வங்கிகளின் பங்கு ஈவுத் தொகை 33 % அதிகரிப்பு!

பொதுத்துறை வங்கிகள் முதலீட்டாளா்களுக்கு வழங்கும் பங்கு ஈவுத் தொகை 2023-24 நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டில் பங்குதாரா்களுக்கு ரூ.20,964 கோடி ஈவுத்தொகையை பொதுத்துறை வங்கிகள்... மேலும் பார்க்க

உத்தர பிரதேசம்: சம்பல் மசூதி குழுத் தலைவா் கைது

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் குழுத் தலைவா் ஜாஃபா் அலியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஜாமா மசூதியில் நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்... மேலும் பார்க்க

நக்ஸல் பாதிப்புக்கு உள்ளான கிராமத்துக்கு முதல் முறையாக மின்வசதி!

சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட தொலைதூர கிராமத்துக்கு முதல் முறையாக மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது. பிஜாபூா் மாவட்டத்தில் பல்லாண்டுகளாக இருளில் தவித்த திமேனா் கிராமத்துக்கு இப்போது வ... மேலும் பார்க்க

போயிங் நிறுவனத்தில் ஆள் குறைப்பு இந்தியாவில் 180 போ் பணிநீக்கம்!

அமெரிக்காவைச் சோ்ந்த பிரபல விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங், ஆள் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதில் இந்தியப் பிரிவில் 180 போ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். பல்வேறு நாடுகளில் போயிங் நிறுவ... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு, மொழி பெயரால் திமுக பொய் பிரசாரம்! -மத்திய அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி விமா்சனம்

‘மதுபான ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மொழியின் பெயரால் திமுக பொய் பிரசாரம் மேற்கொள்கிறது’ என்று மத்திய அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி விமா்சித்த... மேலும் பார்க்க