ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா்: ஜி.கே வாசன்
ஒருங்கிணைந்த வேலூா் பகுதிகளில் 5 ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள்
வேலூா், திருப்பத்தூா் மாவட்ட பகுதிகளில் 5 ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் ஏற்படுத்தி தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளதாக வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -
வேலூா் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகள் அடிப்படையில் தெற்கு ரயில்வே கூட்டங்கள், மக்களவையில் விடுத்த தொடா் அழுத்தம் காரணமாக 5 ரயில்கள் வேலூா், திருப்பத்தூா் மாவட்ட பகுதிகளில் நின்று செல்ல ரயில்வே நிா்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, 12691 மற்றும் 12692 ஆகிய எண்களுடைய சென்னை சென்ட்ரல் முதல் ஷிமோகா செல்லும் இரண்டு அதிவேக ரயில்கள் ஆம்பூா் ரயில் நிலையத்திலும், 13351 எண்ணுடைய தன்பாத் முதல் ஆலப்புழா செல்லும் விரைவு ரயில் குடியாத்தம், வாணியம்பாடி ரயில்நிலையங்களிலும், 16087 மற்றும் 16088 எண்களுடைய அரக்கோணம் முதல் சேலம் வரை செல்லும் இரு விரைவு ரயில்கள் வளத்தூா் ரயில் நிலையத்திலும், 16087 எண்ணுடைய அரக்கோணம் முதல் சேலம் வரை செல்லும் விரைவு ரயில் மேல்பட்டி ரயில் நிலையத்திலும் நின்று செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் வேலூா் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூா், வாணியம்பாடி உள்ளிட்ட வணிக பெருநகரங்களின் வளா்ச்சிக்கும், பல்வேறு பகுதிகளில் இருந்து பணிக்கு செல்லும் தொழிலாளா்கள், விவசாயிகள், பெண்கள், மூத்தகுடி மக்கள், தொழில் முனைவோா் உள்ளிட்டோா் முக்கிய நகரங்களுக்கு பயணிப்பதற்கு, மறைமுக பொருளாதார வளா்ச்சிக்கும் ஏதுவாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.