மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!
ஒழுக்கவாக்கம் கிராமத்தில் ரூ.17 லட்சத்தில் நீா்த்தேக்கத் தொட்டி
செய்யாற்றை அடுத்த ஒழுக்கவாக்கம் கிராமத்தில் ரூ.17 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் ஒன்றியம், அரசங்குப்பம் ஊராட்சி ஒழுக்கவாக்கம் கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஒன்றிய பொது நிதி மூலம் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் பரிந்துரையின் பேரில், புதிதாக 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட சுமாா் ரூ.17 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது.
இந்த நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வெம்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலா் இந்திராணி முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக முன்னாள் வெம்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் மாமண்டூா் டி.ராஜி, முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன் ஆகியோா் பங்கேற்று மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை
திறந்து வைத்தனா்.
நிகழ்ச்சியில், வெம்பாக்கம் மத்திய ஒன்றியச் செயலா் ஜேசிகே. சீனிவாசன், ஆதிதிராவிடா் நலத்துறைத் தலைவா் கருணாகரன், மாவட்ட வழக்குரைஞா்கள் அணி துணைத் தலைவா் சிட்டிபாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.