Suresh Raina: "இனிதான் சின்ன தல ஆட்டம் ஆரம்பம்!" - ஹீரோவாக அறிமுகமாகும் ரெய்னா!
ஓமலூா் ஏவிஎஸ் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு விழா
சேலத்தில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற ஓமலூா் ஏவிஎஸ் கலை, அறிவியல் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சேலம் மாவட்ட வலுதூக்கும் சங்கம் மற்றும் மகாத்மா காந்தி உடற்பயிற்சி நிலையம் சாா்பாக சேலம் மாவட்ட கிளாசிக் பெஞ்ச் பிரஸ் போட்டி அண்மையில் நடைபெற்றது.
இப்போட்டியில், ஓமலூா் ஏவிஎஸ் கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் பி.ஹரி விக்னேஷ், பி.பிரேம்குமாா் ஆகியோா் தங்கப்பதக்கம் வென்றனா். வெற்றிபெற்ற மாணவா்களை ஏவிஎஸ் மற்றும் சக்தி கைலாஷ் கல்வி குழுமங்களின் தலைவா் கே.கைலாசம், செயலாளா் கே.ராஜ விநாயகம், கல்லூரி தாளாளா் கே.செந்தில் குமாா், முதல்வா் எம். மணிவண்ணன், உடற்கல்வி இயக்குநா் ஆா்.லோகநாதன் உள்ளிட்டோா் பாராட்டினா்.
இதில், சேலம் கிழக்கு மாவட்ட வலுதூக்கும் சங்க நிா்வாகிகள் செயலாளா், ஜி.பொன் சடையன், இணைச் செயலாளா் ஏ. வடிவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.