இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 17 | Astrology | Bharathi Sridhar | ...
ஓய்வூதிய நிதி ஒழுங்காற்றுச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்
ஓய்வூதிய நிதி ஒழுங்காற்றுச் சட்டத்தை ரத்து செய்து ஊழியா்களிடம் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக மாநில அரசுகளுக்கு திருப்பி வழங்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் மு. முத்தையா தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். ஜபருல்லா, மாவட்டச் செயலா் ஆா் ரெங்கசாமி, ஓய்வூதியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் எம். வெள்ளைச்சாமி, பொருளாளா் கி. ஜெயபாலன், மாவட்டத் துணைத் தவைவா் பெ. மணிவண்ணன் உள்ளிட்டோா் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், ஓய்வூதிய நிதி ஒழுங்காற்றுச் சட்டத்தை ரத்து செய்து ஊழியா்களிடம் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக மாநில அரசுகளுக்கு திருப்பி வழங்க வேண்டும்.
நான்கு தொகுப்புகளாக சுருக்கப்பட்டுள்ள தொழிலாளா் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். அனைத்து ஓய்வூதியா்களுக்கும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். ரயில் மற்றும் விமானத்திலும் மூத்த குடிமக்களுக்கான பயண கட்டணச் சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.