அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
‘ஓரணியில் தமிழ்நாடு’ இணையதள உறுப்பினா் சோ்க்கை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்
திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்கும் வகையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, ‘ஓரணியில் தமிழ்நாடு’ இணையதள உறுப்பினா் சோ்க்கையை திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலரும், உணவுத் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஒட்டன்சத்திரம் தொகுதி, கள்ளிமந்தையத்தில் உள்ள தனது இல்லத்தில் முதல் உறுப்பினா் சோ்க்கையைப் பதிவுசெய்து பணியைத் தொடங்கி வைத்தாா். இதையடுத்து திமுகவினா் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று பொதுமக்களிடம் திமுக அரசின் சாதனைகளை விளக்கி கட்சி உறுப்பினா்களாகச் சோ்த்தனா்.
இதில், தொப்பம்பட்டி வடக்கு ஒன்றியச் செயலா் பி.சி.தங்கம், திமுக பொதுக் குழு உறுப்பினா் க.தங்கராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அமைப்பாளா் தினேஷ்குமாா், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ஆனந்தராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் தண்டபாணி, முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் கணேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.