‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினா் சோ்க்கை தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் தலைப்பில் திமுக உறுப்பினா் சோ்க்கை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நகா் திமுக சாா்பில் ஆா்.சி.தெருவில் நடைபெற்ற இந்த உறுப்பினா் சோ்க்கையை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
இதில் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், திமுக மாவட்டத் துணைச் செயலா் சேங்கைமாறன், நகா் மன்றத் தலைவா் மாரியப்பன் கென்னடி, திமுக நகரச் செயலா் பொன்னுச்சாமி, ஒன்றியச் செயலா் ராஜாமணி, அண்ணாதுரை, முத்துசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.