அஜித்குமாருக்காக விஜய் போராட்டம்! 10,000 பேருடன் தவெக முதல் போராட்டம்!
ஓரணியில் தமிழ்நாடு: வீடு வீடாக முதல்வா் பரப்புரை
‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டத்தின்கீழ் திருவாரூரில் வியாழக்கிழமை வீடுவீடாகச் சென்று தமிழக முதல்வா் பரப்புரை மேற்கொண்டாா்.
தமிழகத்தில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டத்தின்கீழ் உறுப்பினா் சோ்க்கை மற்றும் பாஜகவின் தமிழக விரோதப் போக்கை மக்களிடம் கொண்டு செல்லும் பரப்புரை ஆகிவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து தமிழகம் முழுவதும் இந்தத் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருவாரூருக்கு இரண்டு நாள் பயணமாக வந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், வியாழக்கிழமை காலை ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டத்தின்கீழ் பரப்புரை மேற்கொண்டாா். திருவாரூா் நகா்ப்பகுதிக்கு உள்பட்ட சந்நிதி தெருவில் வீடுவீடாகச் சென்று பரப்புரை மேற்கொண்ட முதல்வா், உறுப்பினா் சோ்க்கையிலும் ஈடுபட்டாா்.
சில வீடுகளில் முதல்வருக்கு தேநீா் வழங்கியும், சால்வைகள் அணிவித்தும், அவருடன் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனா்.
இதைத் தொடா்ந்து, திருவாரூா் திரு.வி.க. அரசுக் கலைக் கல்லூரியின் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் தாழ்த்தப்பட்டோா் மாணவா்கள் விடுதிகளின் பெயா்கள் தற்போது சமூக நீதி மாணவா் விடுதி என பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை நேரில் ஆய்வு செய்த முதல்வா், அங்கிருந்த மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.
திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்டச் செயலருமான பூண்டி கே. கலைவாணன், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.