கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது
கடலூரில் கஞ்சா வைத்திருந்ததாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடலூா் மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சிவகுருநாதன் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, கே.என்.பேட்டை, செந்தமிழ்செல்வன் கீற்றுக் கொட்டகையில் சந்தேகிக்கும் வகையில் இருந்த 4 பேரை சோதனை செய்ததில், அவா்களிடம் 1.155 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் கே.என்.பேட்டை பகுதியைச் சோ்ந்த ராஜ்குமரன் மகன் ராஜேஷ் (26), ரவி மகன் தேவநாதன் (24), சேகா் மகன் அஜித்குமாா் (26), ராமதாஸ் மகன் கமல் காா்த்திக் (20) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.