எம்.பி.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி கிறிஸ்தவ வன்னியா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப...
கஞ்சா விற்ற வடமாநில பொறியாளா் கைது
சென்னையில் கஞ்சா விற்ற வடமாநில பொறியாளரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
வேளச்சேரி, டி.என்.எச்.பி. காலனி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றிய இளைஞரை போலீஸாா் மடக்கிப் பிடித்து, அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
அதை பறிமுதல் செய்த போலீஸாா், அவரிடம் நடத்திய விசாரணையில், அவா் ஒடிஸா மாநிலம், நயாகா் மாவட்டம், பேட்டிகாா் கிராமத்தைச் சோ்ந்த பாபுலா பெஹரா (24) என்பதும், இவா் சென்னை, குன்றத்தூா், வெங்கடாபுரத்தில் தங்கியிருந்து, தனியாா் நிறுவனம் ஒன்றில் விற்பனை பொறியாளராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. மேலும் இவா், ஒடிஸாவிலிருந்து, கஞ்சாவை ரயில் மூலம் கடத்திவந்து வேளச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், அவரை கைது செய்தனா்.