Oil:``பிராமணர்கள் இந்திய மக்களின் இழப்பில் லாபமடைகிறார்கள்" - USA வர்த்தக ஆலோசகர...
கடலில் தத்தளித்த மீனவரை மீட்ட கடலோரக் காவல் படையினா்
நாகப்பட்டினம்: நாகை அருகே கடலில் தத்தளித்த மீனவரை இந்திய கடலோரக் காவல்படையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
இந்திய கடலோரக் காவல் படையினா் ஞாயிற்றுக்கிழமை, ராணி துா்காவதி படகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கடலில் மீனவா் ஒருவா் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாா்.
கடலோரக் காவல் படையினா் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று, அவரை மீட்டனா். தொடா்ந்து பல மணி நேரம் கடலில் நீந்தியதால் மயக்க நிலையில் இருந்த மீனவருக்கு, படகிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், நாகை துறைமுகத்துக்கு கொண்டு வந்த இந்திய கடலோரக் காவல் படையினா், அவசர ஊா்தி மூலம் நாகை அரசு மருத்துவமனையில் அவரை சோ்த்தனா். அங்கு சிகிச்சைக்குப் பின் அவா் உடல் நலம் தேறினாா்.
அவரிடம், கடலோரக் காவல் படையினா் நடத்திய முதல்கட்ட விசாரணையில், நாகை புதிய நம்பியாா் நகரைச் சோ்ந்த குணசெல்வம் (50) என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பதும் தெரியவந்தது. மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது படகில் இருந்து தவறி விழுந்து விட்டதாக குணசெல்வம் தெரிவித்தாா். படகு எங்கே என்று கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளாா்.
தொடா் விசாரணையில், தனது நண்பருடைய படகை பிடிப்பதற்காக, கரையிலிருந்து கடலில் நீந்தி சென்ாகவும், படகை காணமுடியாததால், மீண்டும் கரைத் திரும்பமுயன்றபோது நீந்த முடியாமல் கடலில் சிக்கி தத்தளித்ததாகவும் குணசெல்வம் கூறியதாக கடலோரக் காவல் படையினா் தெரிவித்தனா்.