செய்திகள் :

கடும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை! ரூ. 10 லட்சம் கோடி இழப்பு!!

post image

சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தும் நிஃப்டி 23,100 புள்ளிகளுக்குக் கீழும் குறைந்து பங்குச்சந்தை இன்று(பிப். 11) கடும் சரிவுடன் வர்த்தகமானது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,384.98 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

பிற்பகலில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. வர்த்தக நேர முடிவில் 1,018.20 புள்ளிகள் குறைந்து 76,293.60 புள்ளிகளில் நிறைவு பெற்றது. அதிகபட்சமாக 1,200 புள்ளிகள் வரை சென்செக்ஸ் சரிந்தது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 309.80 புள்ளிகள் குறைந்து 23,071.80 புள்ளிகளில் முடிவடைந்தது.

இதையும் படிக்க | பிசிஓஎஸ் பிரச்னை இருந்தால் கருத்தரிக்க முடியாதா? - நம்பிக்கையும் உண்மையும்!

நிஃப்டியில் அப்பல்லோ மருத்துவமனை, ஈச்சர் மோட்டார்ஸ், ஸ்ரீராம் நிதி, கோல் இந்தியா, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்தன.

அதேநேரத்தில் அதானி எண்டர்பிரைசஸ், டிரென்ட், பாரதி ஏர்டெல், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை லாபத்தில் முடிவடைந்தன.

நுகர்வோர் சாதனங்கள், மூலதனப் பொருள்கள், ஐடி, எண்ணெய் மற்றும் எரிவாயு, சுகாதாரம், மின்சாரம், பொதுத்துறை நிறுவனம், ரியல் எஸ்டேட், தொலைத்தொடர்பு போன்ற அனைத்துத் துறை குறியீடுகளும் 1-3 சதவீதம் வரை சரிந்தன.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 3 சதவீதமும் ஸ்மால்கேப் குறியீடு 3 சதவீதத்திற்கும் அதிகமாகவும் சரிந்தது.

இந்திய பங்குச் சந்தையில் கடந்த 5 நாட்களில் ரூ.16.97 லட்சம் கோடி இழப்பு!

புதுதில்லி: அமெரிக்க கட்டண அச்சுறுத்தல்களை தொடர்ந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்து வருவதும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெகுவாக குறைத்தது.கடந்த ஐந்து நாட்களில... மேலும் பார்க்க

நிறுவனங்களைப் பழிவாங்கும் ஊழியர்கள்! ஏன்?

பன்னாட்டு நிறுவனங்களில் பணியாளர்களின் திடீர் வேலை விலகல் சமீபத்தில் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் திடீரென பணியைவிட்... மேலும் பார்க்க

1000 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ், நிஃப்டி 1.4% வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தை வணிகத்தில் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. நிஃப்டி 23,100 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது. வணிக நேரத் தொடக்கத்தில் சரிவுடன் தொடங்கிய வணிகம் பிற்பாதியில் கடும் சரிவை எட்... மேலும் பார்க்க

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 4% உயர்வு!

2024-ல் இந்திய ஸ்மார்ட்போன்களுக்கான சந்தை 4 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 15 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா... மேலும் பார்க்க

சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை! சிறு-குறு நிறுவனங்கள் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (பிப். 11) சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 47 புள்ளிகள் சரிவுடனும் நிஃப்டி 30 புள்ளிகள் சரிவுடனும் வணிகம் ஆரம்பமானது. கடந்த நான்கு நாள்களாகத் தொடர்ந்து பங்குச் சந்தை ... மேலும் பார்க்க

சேவைகள் துறையில் 2 ஆண்டுகள் காணாத மந்தம்

புது தில்லி: இந்திய சேவைகள் துறை கடந்த ஜனவரி மாதம் முந்தைய இரண்டு ஆண்டுகள் காணாத குறைவான வளா்ச்சியைக் கண்டுள்ளது.இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் த... மேலும் பார்க்க