செய்திகள் :

கடைசி பந்தில் ரன்னில் அவுட்... தோனியை கண்முன் கொண்டுவந்த RCBW; WPL வரலாற்றில் முதல் சூப்பர் ஓவர்

post image
மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக அரங்கேறிய சூப்பர் ஓவரில், ஆர்.சி.பி அணியை உத்தரப்பிரதேச வாரியர்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றிருக்கிறது.

நடப்பு WPL-ன் ஒன்பதாவது போட்டியில் பெங்களூரு அணியும், உத்தரப்பிரதேச அணியும் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய எல்லிஸ் பெர்ரி 56 பந்துகளில் 90 ரன்களும், டேனி வியாட்-ஹாட்ஜ் 41 பந்துகளில் 57 ரன்களும் குவித்தனர்.

Ellyse Perry
Ellyse Perry

பின்னர், 181 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய உத்தரப்பிரதேச அணியில் ரன்கள் ஒருபக்கம் வந்தாலும் விக்கெட்டுகளும் சரிந்துகொண்டே இருந்தது. 19 ஓவர்களில 9 விக்கெட்டுகளை இழந்துவிட்ட உத்தரப்பிரதேச அணி, கடைசி 6 பந்துகளில் 18 ரன்கள் அடித்தல் வெற்றி என்ற இக்கட்டான நிலைக்குள்ளானது.

எளிதில் வெற்றிபெற்றுவிடலாம் என்று பெங்களூரு ரசிகர்கள் நம்பிக்கை கொண்டிருக்க, ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசவந்தார் ரேணுகா சிங். அப்போது கிரீஸில் இருந்த உத்தரப்பிரதேச வீராங்கனை எக்லெஸ்டோன், முதல் பால் டாட் ஆனபோதும் அடுத்த மூன்று பந்துகளில் 6, 6, 4 என அதிரடி காட்டி 16 ரன்கள் எடுத்து வெற்றிக்கு மிக அருகில் நெருங்கினார். ஐந்தாவது பந்தில் எக்லெஸ்டோன் ஒரு எடுக்க கிராந்தி கவுட் ஸ்ட்ரைக்குக்கு வந்தார்.

ஒரு பந்துக்கு ஒரு ரன்... உத்தரப்பிரதேசம் எளிதாக வெற்றிபெறப்போகிறது என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில்தான், 2016 டி20 உலகக் கோப்பையில் செமி பைனலுக்கு செல்வதற்கான முக்கியமான ஆட்டத்தில், கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் பங்களாதேஷ் வெற்றி என்ற பரப்பான சூழலில், முஸ்தாபிசூர் ரகுமானை தோனி ரன் அவுட் செய்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தது போல, இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ், எக்லெஸ்டோனை ரன் அவுட் செய்து போட்டியை டிரா செய்தார்.

WPL
WPL - கடைசி பந்தில் ரன் அவுட் செய்த ரிச்சா கோஷ்

இதன் மூலம், WPL வரலாற்றில் முதல் சூப்பர் ஓவரில் இவ்விரு அணிகளும் மோதின. இப்போட்டியில், 4 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்திய கிம் கார்த் கைகளில் பந்தைக் கொடுத்து சூப்பர் ஓவரை வீசச் சொன்னார் பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா. கிம் கார்த்தை எதிர்கொள்ள உத்தப்பிரதேச அணியில் கிரேஸ் ஹாரிஸ், சினெல்லே ஹென்றி ஆகியோர் பேட்டிங் இறங்கினர்.

சூப்பர் ஓவரில் முதல் இரண்டு பந்துகளில் சினெல்லே ஹென்றி 4 ரன்கள் எடுக்க மூன்றாவது பந்தில் வைடு போட்டார் கிம் கார்த். பின்னர், திரும்ப வீசிய அந்த பந்திலேயே அவரை விக்கெட் எடுத்த கிம் கார்த், அடுத்த மூன்று பந்துகளில் ஒரு வைடு உட்பட மூன்று ரன்கள் கொடுத்து, சூப்பர் ஓவரில் மொத்தமாக 8 ரன்களைக் கொடுத்தார். அதைத்தொடர்ந்து, 9 ரன்கள் எடுத்தால் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களுரு கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும், ரிச்சா கோஷும் களமிறங்க, உத்தரப்பிரதேச வீராங்கனை எக்லெஸ்டோன் சூப்பர் ஓவர் வீச வந்தார்.

முதல் ஐந்து பந்துகளில் 0, 1, 0, 1, 1 என வெறும் மூன்று ரன்கள் மட்டுமே பெங்களூரு எடுத்தது. கடைசி பந்தில் வெற்றிக்கு சிக்ஸ் அடிக்க வேண்டிய சூழலில் ஸ்மிருதி மந்தனாவால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 4 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரப்பிரதேசம் வெற்றிபெற்றது. ஆட்டநாயகியாக எக்லெஸ்டோன் விருதுபெற்றார்.

``பவுலிங் மோசமா இருக்கு; இனிமேலும் பொறுக்க முடியாது..." - பாக். அணி குறித்து வாசிம் அக்ரம்

பாகிஸ்தான் அணியின் பவுலிங் மிக மோசமாக இருப்பதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் விமர்சித்திருக்கிறார்.2025 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி வழக்கம்போல குரூப் சுற்றிலேயே வெளியேறி இருக்கி... மேலும் பார்க்க

CT 2025: `இந்தியாவுக்கு மட்டும் ஒரே மைதானம்... பெரிய சாதகம்' - பேட் கம்மின்ஸ் கூறுவதென்ன?

பாகிஸ்தானில் கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.சி.சி தொடர் நடைபெற்று வருகிறது. ஆனால், அதுவுமே முழுமையாகப் பாகிஸ்தானில் நடைபெறவில்லை. பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு வர முடியாது என பி.சி.சி.ஐ... மேலும் பார்க்க

Sriram Sridharan: ஆஸி., அணிக்கு 6 வருடம் பயிற்சயளித்த ஸ்ரீராம் - உதவிப் பயிற்சியாளராக நியமித்த CSK

சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்ததும் மார்ச் 22-ம் தேதி கொல்கத்தா vs பெங்களூரு போட்டியுடன் இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 18-வது சீசன் தொடங்கவிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் இரு போட... மேலும் பார்க்க

Virat Kohli : `Return Of the Dragon' சதமடித்த கோலி; திணறிப்போன பாகிஸ்தான் - உற்சாகமடைந்த ரசிகர்கள்

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து இந்திய அணியை வெல்ல வைத்திருக்கிறார் கோலி. கடந்த சில மாதங்களாகவே சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடாத கோலி சரியாக முக்கியமான சமயத்தில் 'Fire' ஆன ... மேலும் பார்க்க

PAK v IND: `சிரஞ்சீவி, வெங்கட் பிரபு, புஷ்பா பட இயக்குநர்' - துபாயில் குவிந்த நட்சத்திரங்கள்

இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு சென்று நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். நேரில் செல்ல முடியாதவர்கள் எப்படியாவது டிவிகளிலும், ஒடிடி தளங்களிலும் கண்டு க... மேலும் பார்க்க

PAK v IND: `ஸ்பின்னர்களை வைத்து பாகிஸ்தானை அடக்கிய இந்தியா' - இந்த ஸ்கோர் எளிய இலக்கா?

சாம்பியன்ஸ் டிராபியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இந்திய ஸ்பின்னர்களின் ஆதிக்கத்தால் பாகிஸ்தான் அணி 241 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறது. முதல் இன்ன... மேலும் பார்க்க