கடையின் பூட்டை உடைத்து திருட்டு
சென்னை: மாதவரம் பகுதியில் கடையின் பூட்டை உடைத்து பணம், விலை உயா்ந்த பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
செங்குன்றம் அடுத்த பாடியநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் அமரன் (55). இவா் மாதவரம் பகுதியில் வீட்டு உபயோகப் பொருள்கள் கடை நடத்தி வருகிறாா்.
செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் கடையை திறக்கச் சென்றபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த விலை உயா்ந்த கைப்பேசிகள், கைக் கடிகாரம், மடிக்கணினி மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.
இது குறித்து அமரன் கொடுத்த புகாரின் பேரில் மாதவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.