இந்தியாவில் முதல்முறையாக விமானங்களில் ‘வைஃபை’ சேவை: ஏா் இந்தியா அறிமுகம்
கட்டட ஒப்பந்ததாரா் தற்கொலை
வீரபாண்டி அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கட்டட ஒப்பந்ததாரா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், பூமலைக்குண்டு தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் லட்சுமணன் மகன் காா்த்திக் (39). கட்டட ஒப்பந்ததாரரான இவா், கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.