கண்ணப்பா ஓடிடி தேதி!
பான் இந்திய நடிகர்கள் நடித்த கண்ணப்பா படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனான விஷ்ணு மஞ்சு நாயகனாக நடித்த ‘கண்ணப்பா’ உலகம் முழுவதும் கடந்த ஜூன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் எனப் பல மொழிகளிலும் ’பான்-இந்தியா’ திரைப்படமாக எடுக்கப்பட்டது.
சிவ பக்தரின் கதையாக உருவான படமென்பதால் இதன் வணிக நோக்கிறாக இந்தியளவில் பிரபலமான நடிகர்கள் பிரபாஸ், மோகன் லால், அக்ஷய் குமார், சரத் குமார், காஜல் அகர்வால் இளம் நாயகி ப்ரீத்தி முந்தன், நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம், மோகன் பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.
ஆனால், படம் ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது. இதனால், ரூ. 200 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வணிக ரீதியாகக் கடுமையாக பாதிக்கப்பட்டு ரூ. 40 கோடி மட்டும் வசூலித்து மிகப்பெரிய தோல்விப்படமானது.
இந்த நிலையில், இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகிற செப். 4 ஆம் தேதி தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சிம்புவுடான படத்தில் தனுஷ் நடிப்பாரா? வெற்றி மாறன் பதில்!