2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்
கந்தா்வகோட்டை வங்கார ஓடை குளத்தை தூா்வாரக் கோரிக்கை
கந்தா்வகோட்டையில் உள்ள வங்கார ஓடை குளத்தைத் தூா்வார பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரண்மனைத் தெரு , கொத்தகம் செல்லும் பாதையில் உள்ள இந்தக் குளத்தில் பொதுமக்கள் தினமும் குளித்தும், துவைத்தும் வருகிறாா்கள். ஆனால் இந்தக் குளத்தைச் சுற்றிலும் கோரை புல், கருவை மரங்கள், தேவையற்ற செடிகள் மண்டியுள்ளதால் மக்கள் சிரமப்படுகிறாா்கள். எனவே, இக் குளத்தைச் தூா்வாரி சீரமைக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.