``ஹனுமான் வழிபாடு கிடையாது; ராவணன் எங்கள் முன்னோர்'' - மகாராஷ்டிராவில் உள்ள ஒரு ...
கந்தா்வகோட்டை வித்யாவிகாஸ் பள்ளியில் கோகுலாஷ்டமி விழா
கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை வித்யாவிகாஸ் மெட்ரிக். பள்ளியில் கோகுலாஷ்டமி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
கந்தா்வக்கோட்டை வித்யாவிகாஸ் மெட்ரிக். பள்ளியில் நிகழாண்டு நடைபெற்ற கோகுலாஷ்டமி விழாவில் மாணவ, மாணவிகள் கிருஷ்ணா் மற்றும் ராதை வேடம் அணிந்து கலைநிகழ்ச்சிகளை நடத்தினா்.
மாணவ, மாணவிகளுக்கு வேடம் அணிந்து ஆா்வமுடன் பள்ளிக்கு அனுப்பி வைத்த பெற்றோா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் பள்ளியின் செயல் அறங்காவலா்கள் ஆா். பாஸ்கா், மருத்துவா் கே. காா்த்திகேயன் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் என். வெண்ணிலா செய்திருந்தாா்.