செய்திகள் :

கனடா: பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் மூன்றாவது G7 நாடா? - விரிவான தகவல்கள்

post image

செப்டம்பரில் பாலஸ்தீனத்தை தனி நாடாக கனடா ஏற்றுக்கொள்ளும் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கு அடுத்ததாக கனடாவும் இந்த முடிவை எடுத்துள்ளது. இதன்மூலம், அண்மையில் இந்த முடிவை எடுக்கும் மூன்றாவது G7 நாடாக கனடா திகழ்கிறது.

கார்னி கூறியது என்ன?

``ஜனநாயக சீர்த்திருத்தங்களை பாலஸ்தீன தேசிய ஆணையம் முன்னெடுக்க வேண்டும். ஹமாஸ் பங்கேற்பு இல்லாமல் அடுத்த ஆண்டு தேர்தல்களை நடத்த வேண்டும்” என்ற நிபந்தனைகளை கனடா பிரதமர் மார்க் கார்னி விதித்துள்ளார்.

பாலஸ்தீனை அங்கீகரிக்கக் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பை வரவிருக்கும் ஐ.நா பொதுக்குழு கூட்டத்தில் கனடா முன்னெடுக்கும் என கார்னி தெரிவித்தார்.

மார்க் கார்னி

மேலும் அவர், "காஸாவில் மனிதர்கள் வதைப்படுவது சகிக்க முடியாத அளவில் உள்ளது. அது மேலும் மேலும் மோசமடைந்தும் வருகிறது," என்றும் அவர் கூறினார்.

அதே நேரத்தில், பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் பாலஸ்தீன தேசிய அணையம், தனது ஆட்சி முறையை திருத்தி, ஆயுதமில்லா நிலைமைக்கு உடன்பட வேண்டும் என்ற நிபந்தனையையும் அவர் விதித்துள்ளார்.

பிரதமர் கார்னி, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அபாஸுடன் அதன் நிலை பற்றி பேசியதாகவும் தெரிவித்துள்ளார். தற்போதைய பாஸலஸ்தீன அரசு மேற்கு கரையை கட்டுப்படுத்தும் பத்தாஹ் கட்சியின் கீழ் இயங்குகிறது. காஸா பகுதியில் ஹமாஸ் ஆதிக்கம் செலுத்துகிறது. 2006 இற்குப் பிறகு இந்த பகுதிகளில் தேர்தல் நடத்தப்படவில்லை.

கனடா எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி கனடா அரசின் இந்த முடிவை எதிர்த்துள்ளது.

அக்டோபர் 7 இல் நடந்த பயங்கரவாத நடவடிக்கைக்குப் பிறகு பாஸலஸ்தீனை அங்கீகரிப்பது தவறான சமிக்ஞையை உலகுக்கு தருவதாக அது கூறி உள்ளது.

200க்கும் மேற்பட்ட முன்னாள் கனடிய தூதர்களும், பாஸலஸ்தீன அங்கீகாரத்தை ஆதரித்து கார்னிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேலின் எதிர்வினை:

இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் கனடாவின் இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார். இது ஹமாஸுக்கு சாதகமான முடிவு என விமர்சித்துள்ள அவர், "இது ஹமாஸுக்கு வழங்கப்படும் பரிசாகும்" என்று X தளத்தில் தெரிவித்துள்ளார்

193 ஐ.நா உறுப்பு நாடுகளில் 147 நாடுகள் பாலஸ்தீனத்தை இறையாண்மை உள்ள அரசாக அங்கீகரிக்கிறது.

7 அக்டோபர் 2023ல் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 251 பேர் கடத்தப்பட்டனர். அதன்பின்னர் இஸ்ரேல் காஸாவில் தாக்குதலைத் தொடங்கியது. தற்போது வரை 60,000 பேர் காஸாவில் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் இயக்கத்தின் சுகாதார துறை தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன பிரச்னை சிறு குறிப்பு:

1948-ம் ஆண்டு ஒரு தேசம் இரண்டு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அதில் ஒரு பிரதேசம் பிரிக்கப்பட்ட தினம் முதலே தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. மற்றொரு பிரதேசம் இன்று வரை, தனி நாடு என்கிற அங்கீகாரத்துக்காகப் போராடிவருகிறது. இதில் அங்கீகரிக்கப்பட்ட நாடு இஸ்ரேல். அங்கீகாரத்துக்காகப் போராடிவருவது பாலஸ்தீனம்.

இஸ்ரேல். யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மத்திய கிழக்கு நாடு. இங்கு 70 சதவிகிதத்துக்கும் அதிகமான யூதர்கள் வாழ்ந்துவருகின்றனர். சுமார் 20 சதவிகித இஸ்லாமியர்களும், 10 சதவிகிதத்துக்கும் குறைவாக கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரும் வாழ்ந்துவருகின்றனர்.

காஸா

மற்றொரு பிரதேசமான பாலஸ்தீனம் இன்று வரையில் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதியாகத்தான் குறிப்பிடப்பட்டுவருகிறது. 2012-ம் ஆண்டுதான் பாலஸ்தீனம் ஐ.நா-வில் `அப்சர்வர் ஸ்டேட்' என்கிற அந்தஸ்தைப் பெற்றது. இங்கு 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக இஸ்லாமிய மக்களே வாழ்ந்துவருகின்றனர். மேற்குக் கரை, காஸா என பாலஸ்தீனம் இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ளன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 முக்கிய செய்திகள்!

சௌதி அரேபியாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் விழுந்ததில் 23 பேர் காயமடைந்தனர்.கேரளா பள்ளிகளில் ஒரு மாத விடுமுறையை வெயில் காலத்துக்கு பதில் மழைக் காலத்தில் அளிப்பது குறித்து மக்களிடம் கருத்த... மேலும் பார்க்க

"ஓ.பி.எஸ், முதல்வரை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்திருப்பார்" - சொல்கிறார் செல்லூர் ராஜூ

மதுரை விளாங்குடியில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். "அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ் வெளியேறிவிட்டாரே" என்ற கேள்விக்கு,"அவர் அதிமுக கூட்... மேலும் பார்க்க

"இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது" - ட்ரம்ப் கருத்தை ஏற்ற ராகுல் காந்தி; முரண்பட்டாரா சசி தரூர்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவை "இறந்த பொருளாதரம்" என விமர்சித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது எதிர்க்கட்சித் தலைவர் ரா... மேலும் பார்க்க

Trump: பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்கா; பாக்-இல் எண்ணெய் வளமா? ட்ரம்ப் கூறுவது உண்மையா?

'பாகிஸ்தானுடன் இப்போது தான் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். அதன் படி, பாகிஸ்தானில் எண்ணெய் வளங்களை மேம்படுத்துவதில், அமெரிக்கா பாகிஸ்தானுக்கு உதவ உள்ளது.இரு நாடுகளின் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஒரு எண... மேலும் பார்க்க

ட்ரம்ப் - பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் நெருக்கம்; குறைந்த வரி விகிதம்! - இதற்கான 4 காரணங்கள் என்ன?

இந்தியாவுக்கு 25 சதவிகித வரிப் போட்டு தள்ளியிருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தானுக்கு 19 சதவிகித வரியைத் தான் போட்டுள்ளார். மேலும், ட்ரம்பிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள நட்பு வலுத்து வரு... மேலும் பார்க்க

"கவின் தாயார் கண்ணீருக்கு பதில் இருக்கிறதா? திமுக ஆட்சிக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகியும்..." - சீமான்

திருநெல்வேலியில் ஜூலை 27-ம் தேதி கவின் என்பவர் சுர்ஜித் என்பவரால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.இதில், கொலையாளி சுர்ஜித் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் தாய் தந்தையான காவல்துறை அதிகாரிகள் சரவணன்,... மேலும் பார்க்க