திருமணம் என்ற கருத்தில் நம்பிக்கையில்லை..! மனம் திறந்த ஷ்ருதி ஹாசன்!
கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் ரூ. 3.50 கோடியில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல்
கன்னியாகுமரி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 3.50 கோடியில் புதிய கட்டடத்துக்க ான அடிக்கல் நாட்டுவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா தலைமை வகித்தாா். அமைச்சா் த.மனோ தங்கராஜ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பேசியதாவது: கன்னியாகுமரி அரசு மருத்துவமனையை மேம்படுத்தும் பொருட்டும், பொதுமக்களின் அவசர சேவைக்காக மருத்துவமனை வளாகத்தில் 15 ஆவது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.3.50 கோடியில் விபத்து அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மைய கூடுதல் கட்டடம் கட்டப்படவுள்ளது.
இப்புதிய கட்டடத்தின் தரைதளத்தில் வெளிநோயாளிகள் பிரிவும், முதல்தளத்தில் அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் பின் கவனிப்பு பிரிவும் அமைக்கப்படவுள்ளது.
கன்னியாகுமரி நகராட்சிப் பகுதி மக்களுக்கும், அதன் அருகில் உள்ள பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ், நகராட்சி ஆணையா் கன்னியப்பன், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, கன்னியாகுமரி நகராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன், துணைத் தலைவா் ஜெனஸ் மைக்கேல் மற்றும் நகராட்சி கவுன்சிலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.