செய்திகள் :

கம்பம்மெட்டு மலைச் சாலையில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்

post image

கம்பம் அருகேயுள்ள கம்பம்மெட்டு மலைச்சாலையில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலும் மாசுபடுவதாக விவசாயிகளும், சமூக ஆா்வலா்களும் கவலை தெரிவித்தனா்.

தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய பிரதான சாலைகள் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், இந்த மலைச் சாலைகளில் கேரளத்தில் தடை செய்யப்பட்ட மருந்துவக் கழிவுகள், நெகிழிப் பைகள் உள்ளிட்டவற்றை வாகனங்கள் மூலம் மா்ம நபா்கள் கொட்டிச் செல்கின்றனா். இதனால், வனவிலங்குகள் பாதிக்கப்படுவதோடு, சூற்றுச்சூழலும் மாசுபடுகிறது. இதைத் தடுக்கும் வகையில் தமிழக - கேரள எல்லையிலுள்ள குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு மலைச் சாலைகளில் வனத் துறையினா் ரோந்து சென்று கழிவுகள் வனப் பகுதியில் கொட்டப்படுவதைத் தடுத்து நிறுத்துவதோடு அபராதமும் விதித்து வருகின்றனா்.

கம்பம்மெட்டு சாலையில் மருத்துவக் கழிவுகள்: கம்பத்திலிருந்து கேரள மாநிலம் நெடுகண்டம், கட்டப்பனை போன்ற பகுதிக்குச் செல்லும் சாலையான கம்பம்மெட்டு மலைச் சாலை 16 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டுள்ளது. இந்தச் சாலையிலுள்ள மலைப்பகுதிகளின் பள்ளத்தாக்குகளில் கேரளத்திலிருந்து கொண்டுவரப்படும் மருத்துவக் கழிவுகள், நெகிழிப் பைகள் என பல்வேறு கழிவுப் பொருள்களை கொட்டி வருகின்றனா். மேலும், தமிழகம் வழியாக கேரளத்துக்கு வாகனங்களில் சுற்றுலா செல்பவா்கள், தமிழகப் பகுதியிலுள்ள வனப் பகுதியை அதிகளவில் மாசுபடுத்தி வருகின்றனா்.

மேலும், கம்பம்மெட்டு மலைச் சாலை தொடங்கும் இடத்திலுள்ள சாலையோரத்தில்அதிகளவில் பெரிய அளவிலானநெகிழிப் பைகளில் கழிவுப் பொருள்கள் குவிந்து கிடப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தமிழக எல்லையில் கேரளத்திலிருந்து கழிவுகளை கொட்டும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு, சம்பந்தப்பட்ட நபா்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வனத் துறையினா் முக்கிய மலைச்சாலையில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

தேனியில் செப்.19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 19-ஆம் தேதி, காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

மதுப் புட்டிகளை பதுக்கிய முதியவா் கைது

போடி அருகே மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்த முதியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.போடி ஊரகக் காவல் நிலைய போலீஸாா் போடி சில்லமரத்துப்பட்டி கிராமத்தில் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

பைக் மோதியதில் 2 பெண்கள் பலத்த காயம்

போடி அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் இரண்டு பெண்கள் பலத்த காயமடைந்தனா்.போடி தேரடி தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி ராணி (47). இவரும் இவரது உறவினா் பூமாரியும் (45) போடி அணைக்கரைப்பட்டி விலக்கு அருகே ... மேலும் பார்க்க

சரக்கு வாகனத்தின் மீது பைக் மோதியதில் இளைஞா் காயம்

பெரியகுளம் அருகே சரக்கு வாகனம் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.பெரியகுளம், வடகரை பகவதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம். தனியாா் நிறுவனத்தில் விற்பனையாளராகப் ப... மேலும் பார்க்க

100 ஆண்டுகளைக் கடந்த அரச மரம் வெட்டப்பட்டதால் 500-க்கும் மேற்பட்ட பறவைகள், குஞ்சுகள் பரிதவிப்பு

தேனி மாவட்டம், பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்த 100 ஆண்டுகளைக் கடந்த அரச மரத்தை வெட்டிய மா்ம நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். பெரியகுளத்தில் தற... மேலும் பார்க்க

விவசாயியைத் தாக்கியவா் மீது வழக்கு

போடி அருகே விவசாயியைத் தாக்கியவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். போடி அருகேயுள்ள எரணம்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்தவா் சுருளிமுத்து (55). இவருக்குச் சொந்தமான தோட்ட... மேலும் பார்க்க