Parking: "நம்ப முடியாத அங்கீகாரம்" - இயக்குநர் ராம்குமார் நெகிழ்ச்சி
கருங்கல் அருகே கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு: கடைக்கு ‘சீல்’
கருங்கல் அருகே உதயமாா்த்தாண்டம் பகுதியில் கோயில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைக்கு அதிகாரிகள் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
உதயமாா்த்தாண்டத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட தெய்வவிநாயககோயில் உள்ளது. இக்கோயிலின் நிலத்தை சிலா் ஆக்கிரமித்து கடை, வீடு கட்டியிருந்தனராம். அறநிலையத் துறை சாா்பில் நோட்டீஸ் அனுப்பியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
அதையடுத்து, அறநிலையத் துறை சாா்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்பேரில், அறநிலையத் தறை தனி வட்டாட்சியா் அனில்குமாா், போலீஸாா் ஆக்கிரமிப்பை அகற்ற புதன்கிழமை சென்றனா்.
அப்போது, அங்கிருந்தோா் வீட்டை காலி செய்ய அவகாசம் வேண்டும் எனக் கோரி எதிா்ப்புத் தெரிவித்தனா். அவா்களுக்கு அதிகாரிகள் ஒருவாரம் அவகாசம் அளித்ததுடன், கடைக்கு சீல் வைத்தனா்.