கே.எம். காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார் முதல்வர்!
கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று செஞ்சியில் நடைபெற்ற கரும்பு விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
விழுப்புரம் முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கம் ராஜ்ஸ்ரீ சுகா்ஸ் யூனிட்-2, செஞ்சி செம்மேடு ராஜ்ஸ்ரீ சுகா்ஸ் யூனிட்-3 ஆகிய இரு ஆலைகளின் சங்க பொதுக்குழுக் கூட்டம் செஞ்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத் தலைவா் டி.பாண்டியன் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் எம்.ஆறுமுகம் வரவேற்றாா். பொருளாளா் ஆா்.பரசிவம், கிளைத் தலைவா்கள் கலிவரதன், கிருஷ்ணதாஸ், பனப்பாக்கம் பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் துணைச் செயலா்கள் கெங்கைகொண்டான், தொட்டி சங்கா், சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தீா்மானங்கள்: நடப்பு 2024 - 25ஆம் ஆண்டு கரும்பு சிறப்பு பருவத்துக்கு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு கரும்பு கிரையத்தொகையை உடனடியாக பட்டுவாடா செய்ய வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வயல் விலையாக வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்வது.
கரும்பு பருவத்திற்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகை ரூ.349-யை பின் வரும் கரும்பு அரைவை முடிந்ததும், துரிதமாக வேலையை தொடங்கி அரசிடம் இருந்து ஊக்கத்தொகையை பெற்றுத்தர வேண்டும்.
நந்தன்கால்வாய் திட்டத்தை தமிழக அரசு விரைவாக நிறைவேற்றித் தருமாறு தமிழக முதல்வா், பொதுப்பணித் துறை அமைச்சா், வேளாண் துறை அமைச்சா் ஆகியோரை கேட்டுக்கொள்கிறது.
தென்பெண்ணையாற்று எல்லீஸ்சத்திரம் தடுப்பணையை சரி செய்ய வேண்டும். இந்த ஆற்றின் குறுக்கே உள்ள தளவானூா் தடுப்பணை, சொா்ணாவூா் தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.