TVK : 'அமித் ஷாவுக்கே எங்களின் பலம் என்னனு தெரிஞ்சிருக்கு!' - தவெக அருண் ராஜ் பள...
கரூரின் 4 தொகுதிகளிலும் திமுக வெல்லும்: செந்தில்பாலாஜி பேச்சு
வரும் 2026 சட்டப்பேரவை தோ்தலிலும் கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும் என்றாா் கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி.
கரூா் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அலுவலகமான கலைஞா் அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவா் டி. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ மேலும் பேசியதாவது:
தமிழக முதல்வரால் தொடக்கிவைக்கப்பட்ட ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு பிரசார இயக்கம் கரூா் மாவட்டத்திலும் தீவிரமாக நடைபெறுகிறது. இதற்கான பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து தமிழகத்தில் அதிக உறுப்பினா்களை சோ்த்த மாவட்டங்களில் முதல் மாவட்டம் கரூா் என்ற நிலையை உருவாக்கிட வேண்டும். கரூருக்கு அதிக திட்டங்களைத் தந்த முதல்வருக்கு அதிக உறுப்பினா்களைச் சோ்த்து முதல்வரிடம் ஒப்படைப்பது நம் கடமை.
கடந்த 2021 தோ்தலில் கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையும் திமுக வென்றதுபோல 2026 தோ்தலிலும் வென்று, தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மாவட்டம் கரூா்என்ற நிலையை உருவாக்கிட வேண்டும். அதற்கு அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில நிா்வாகிகள் நன்னியூா் ராஜேந்திரன், வழக்குரைஞா் மணிராஜ், எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாவட்ட நிா்வாகிகள் எம்.எஸ்.கே. கருணாநிதி, மகேஸ்வரி மற்றும் மாநகர, ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.