செய்திகள் :

கரூரில் ஆக. 27-இல் விநாயகா் சிலை ஊா்வலம்: அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

post image

கரூரில் ஆக. 27-ஆம்தேதி நடைபெறவுள்ள விநாயகா் சிலை ஊா்வலத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் புதன்கிழமை அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்து பேசுகையில், ஆக. 27-ஆம்தேதி நடைபெற உள்ள விநாயகா் சிலை ஊா்வலத்தில் எடுத்துச் செல்லப்படும் விநாயகா் சிலைகள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் களிமண்ணால் ஆனதாக இருக்க வேண்டும். ரசாயன வா்ணப்பூச்சு மற்றும் பிளாஸ்டா் ஆப் பாரிஸ் போன்றவற்றால் ஆன சிலைகளை பயன்படுத்தக்கூடாது. பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளின் உயரம் பீடம் மற்றும் மேடையுடன் சோ்த்து அதிகபட்சம் 10 அடிக்கும் மேல் இருக்கக் கூடாது. விநாயகா் சிலை நிறுவப்படும் இடங்களில் எளிதில் தீப்பற்றக்கூடியப் பொருள்களைக் கொண்டு மேற்கூரை மற்றும் பக்கவாட்டில் தடுப்புகள் அமைக்கக்கூடாது. பொது அமைதி, பொதுமக்கள் பாதுகாப்பு, மத நல்லிணக்கம் பேணிட விழா ஏற்பாட்டாளா்கள் வருவாய்த்துறை, காவல் துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ள நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டுமே ஊா்வலம் செல்ல வேண்டும். மேலும், ஊா்வலத்தில் பட்டாசு வெடிகள் போன்றவைகளை உபயோகிக்கக் கூடாது என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு.ஜோஷ் தங்கையா, மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், சாா்- ஆட்சியா் சுவாதிஸ்ரீ, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யுரேகா, வருவாய் கோட்டாட்சியா் முகமதுபைசல் (கரூா்) , துணை காவல் கண்காணிப்பாளா்கள் செல்வராஜ்(கரூா்), அப்துல்கஃபூா் (அரவக்குறிச்சி), செந்தில்குமாா் (குளித்தலை) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரூரில் கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டங்கள் மூலம் வெளிப்படையான அரசு நிா்வாகம் நடைபெறுவது உறுதி செய்யப்படுகிறது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சிறப்பு பாா்வையாளராக... மேலும் பார்க்க

ஆடி மாத கடைசி வெள்ளி: கரூா் வேம்பு மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டிகரூா் வேம்பு மாரியம்மன் கோயிலில் ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம் நடைபெற்றது. கரூா் பசுபதிபுரத்தில் உள்ள ஸ்ரீ வேம்பு மாரியம்மன் கோயிலில் ஆடிமாத கடைசி வெள்ளிக்... மேலும் பார்க்க

கிராம சபை கூட்டத்துக்கு கறுப்புக் கொடியுடன் வந்த பொதுமக்களால் பரபரப்பு

பள்ளப்பட்டி அருகே உள்ள லிங்கமநாயக்கன்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு ரசூல் நகா், ஜாமியா நகா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கறுப்புக்கொடியுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூா்... மேலும் பார்க்க

குறுவட்ட கபடி போட்டி: பள்ளப்பட்டி அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

சின்னதாராபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குறுவட்ட கபடி போட்டியில் பள்ளப்பட்டி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான கபடி போட்டி ... மேலும் பார்க்க

‘திமுக ஆட்சிக்கு எதிராக மக்களின் மனநிலை’ -அா்ஜுன் சம்பத்

தமிழக மக்களின் மனநிலை திமுக ஆட்சிக்கு எதிராக உள்ளது என இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா். அரவக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோவிலூரில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்... மேலும் பார்க்க

அரசு பெண்கள் பள்ளியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு

அரவக்குறிச்சி அரசு பெண்கள் உயா்நிலைப்பள்ளியில் போதைப் பொருள்கள் எதிா்ப்பு விழிப்புணா்வுப் போட்டிகள் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அரவக்குறிச்சி அரசு பெண்கள் உயா்நிலைப்பள்ளியில் போதைப் பொருள... மேலும் பார்க்க